

ஆசிய யானைகளில் மூன்று துணை வகைகள் உள்ளன:
E. m. indicus இந்தியாவில் வாழும் உள்ளினம்
E. m. maximus இலங்கையில் வாழும் உள்ளினம்
E. m. sumatranus சுமத்ராவில் வாழும் உள்ளினம்
உலகில் 13 நாடுகளில் ஆசிய யானை வாழ்கிறது. இந்தியாவில் 16 மாநிலங்களில் வாழ்கிறது.
உலகில் உள்ள ஆசிய யானைகளின் எண்ணிக்கை:
35,000 40,000
இதில் பெருமளவு இந்தியாவில்தான் உள்ளது: 25,000 30,000
இந்தியாவில் பெரும்பான்மையான யானைகள் தென்னிந்தியாவில் உள்ளன: 15,000 20,000
இந்த யானைகளில் பெரும்பகுதி (சுமார் 9,000) குறிப்பிட்ட ஒரு பகுதிக்குள் வாழ்கிறது. பிரம்மகிரி, நீலகிரி, கிழக்கு மலைத்தொடர் ஆகிய மூன்றும் சந்திக்கும் இடமே அந்தப் பகுதி. உலகிலேயே ஆசிய யானைகள் அதிகமாக வாழும் பகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சுற்றுவட்டாரத்தில் பாதுகாக்கப்பட்ட சரணாலய வளையத்துக்குள் பெரும் பகுதி இருப்பதே, யானைகள் அதிகம் இருப்பதற்கு அடிப்படைக் காரணம்.
இருந்தபோதும் இங்கும் காடுகள் துண்டாடப்படுவது, காடுகளின் தரம் வீழ்ச்சியடைவதுதான் யானைகள் காட்டை விட்டு வெளியே வருவதற்கு அடிப்படைக் காரணம். யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கான ஆதாரங்களைவிட, காட்டின் பரப்பு அப்பட்டமாகக் குறைந்துவருவதே யானைகள் வெளியேறுவதற்கு முதன்மைக் காரணம்.
அது மட்டுமல்லாமல் யானைகள் குறிப்பிட்ட காட்டு எல்லைக்குள்ளோ, மாநில எல்லைக்குள்ளோ வாழ்வதில்லை. தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருக்கக்கூடியவை.
தமிழகத்தில் சுமார் 4,000 யானை களின்வரை இருக்கலாம். இவை தமிழக எல்லைக்குள் மட்டுமே இருக்கும் என்று சொல்ல முடியாது.
யானை மனித எதிர்கொள்ளல் காரணமாக ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் ஏற்படும் உயிர்ப் பலி:
மனிதர்கள்: 450, யானைகள்: 150
ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்தில் இறந்துபோகும் காட்டு யானைகளின் எண்ணிக்கை (சராசரி): 75