

பஞ்சுருட்டான் (Green Bee-eater) எனப்படும் இந்தப் பறவையை திறந்தவெளிப் பகுதிகளில் பொதுவாகப் பார்க்கலாம். பல விநோத பண்புகள் கொண்ட பறவை இது.
பூச்சிகள், தட்டான், வண்ணத்துப்பூச்சி, தேனீ போன்றவை பறக்கும்போதே அலகால் பிடித்து, அமர்ந்திருந்த இடத்துக்கு திரும்பப் பறந்து வந்து சாப்பிடும்.
ஆற்றங்கரைச் சரிவுகளில் மண்ணைக் குடைந்து கூடு அமைக்கிறது. இதன் வாலில் நடுவே ஓர் இறகு ஊசியைப் போல நீட்டிக் கொண்டிருக்கும்.