சிறு துளி: துவரம் பருப்பு விளைச்சல் குறைந்தது

சிறு துளி: துவரம் பருப்பு விளைச்சல் குறைந்தது
Updated on
1 min read

இந்தியத் துவரம் பருப்பு உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நாடாகம் ஆகிய மாநிலங்களில் மழையின்மையால் வெள்ளாமை பாதிக்கப் பட்டுள்ளது. இதனால் கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் உள்ள முக்கியச் சந்தைகளில் ஒரு குவிண்டாலுக்கு ரூ.1,000 வரை விலை கூடுதலாகத் துவரம் பருப்பு விலை போவதாகச் சொல்லப்படுகிறது.

குவிண்டாலுக்கு ரூ. 6,000க்கும் கூடுதலாக விற்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு (NAFED) இன்னும் துவரம் பருப்பு கொள்முதல் செய்யாததால்தான் இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. தற்காலிகமாக அந்த அமைப்பு கொள்முதலை நிறுத்திவைத்துள்ளது.

மதுரையில் இயற்கை வேளாண் பயிற்சி

ஜூன் 01, 02 (சனி - ஞாயிறு) ஆகிய நாட்களில் மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே சோலைப்பட்டியில் உள்ள அடிசில் சோலை இயற்கை வேளாண் பண்ணையில் இயற்கை வேளாண் அறிஞர்கள் சுந்தரராமன், பாமயன் ஆகியோரது வழிகாட்டுதலில் இயற்கை வேளாண் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. பண்ணை வடிவமைப்பு, விதைத் தேர்வு, கால்நடை வளர்ப்பு, பூச்சிக் கட்டுப்பாடு, உரம் தயாரிப்பு, நாடகம், விழிப்புணர்வு எனப் பல்வேறு நிகழ்வுகளும் பயிற்சிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. பயிற்சியில் கலந்துகொள்ளக் கட்டணம் ரூ.1000 . உணவு, தங்கும் வசதி உண்டு. மேலும், தகவல்களுக்கு 9597557794 (யோகேஷ் கார்த்திக் - ஒருங்கிணைப்பாளர்) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

வேளாண் பல்கலைக்கழகப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடைக்குப் பின்சார் தொழில்நுட்பத் துறையின் சார்பில் ‘மசாலாப் பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரித்தல்’ பயிற்சி நடத்தப்படவுள்ளது. இந்த மாதம் 30, 31 ஆகிய இரு தேதிகளில் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சிக்குக் கட்டணம் ரூ.1,500. பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களுக்குத் துறைத் தலைவரை 0422 6611268 என்ற எண்ணில் தொடர்புகொள்க.

- தொகுப்பு: விபின்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in