வேளாண் பல்கலைக்கழகப் பயிற்சி

வேளாண் பல்கலைக்கழகப் பயிற்சி
Updated on
1 min read

வேளாண் பல்கலைக்கழகப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடைக்குப் பின்சார் தொழில் நுட்பத் துறையின் சார்பில் ‘மதிப்பூட்டப்பட்ட தக்காளி, ‘நோனி’ உணவு தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற இருக்கின்றன.

இந்த மாதம் 15, 16 ஆகிய இரு தேதிகளில் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சிக்குக் கட்டணம் ரூ.1,500. பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களுக்குத் துறைத் தலைவரை 0422 6611268 என்ற எண்ணில் தொடர்புகொள்க.

முந்திரி சட்டவிரோத இறக்குமதி

வியட்நாம், மொசாம்பிக் போன்ற நாடுகளில் உற்பத்தியாகும் தரக் குறைவான முந்திரி இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டுவருவதாக இந்திய முந்திரி ஏற்றுமதிக் கழகம் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் உள்நாட்டு முந்திரி உற்பத்திக்குப் போதிய வரவேற்பு கிடைப்பதில்லை என முந்திரி ஏற்றுமதிக் கழகத்தின் தலைவர் ஆர்.கே.பூதஸ் தெரிவித்துள்ளார்.

அஸ்ஸாமில் படைப்புழு

மக்காச்சோளத்தைத் தாக்கி அழிக்கும் படைப்புழு இப்போது அஸ்ஸாமைச் சென்றடைந்துவிட்டது. ஆப்பிரிக்காவில் தோன்றிய இந்தப் படைப்புழு இப்போது இந்தியா, இலங்கை, வங்கதேசம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல ஆசிய நாடுகளுக்கும் வேகமாகப் பரவி வருகிறது.

இப்போது அஸ்ஸாம் மாநில அரசு, மத்திய அரசுக்குப் படைப்புழுக்களின் தாக்கம் குறித்து அறிக்கை அளித்துள்ளது. 122 கிராமங்களில் 1747 ஏக்கர் விளைநிலம் படைப்புழுக்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதன் மூலம் ரூ. 20 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

டேங்கர் லாரி தண்ணீரில் விவசாயம்

கோடை மழையை நம்பிய காய்கறிப் பயிர்கள் கடும் வெயிலால் வாடிவருகின்றன. தமிழகத்தின் பல பகுதிகளில் இந்த நிலைதான். கிணற்றுத் தண்ணீர் மட்டமும் குறைந்துவிட்டதால் இப்போது விவசாயிகள் பலர் டேங்கர் லாரியில் தண்ணீர் வாங்கி பாசனம் செய்துவருகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in