

ராஜிவ் மேனன் - ஒளிப்பதிவாளர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைப்பள்ளி நிர்வாகி என்று எப்போதும் பிஸியாக இருப்பவர் என்பதெல்லாம் தெரியும்.
ஆனால், அவர் காட்டுயிர்களை ஒளிப்படம் எடுப்பதில் தீராக் காதல் கொண்டவர் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது.
வருடத்துக்கு இரண்டு முறையாவது காடுகளுக்குச் சென்று, இயற்கையையும் காட்டுயிர்களையும் தன் கேமராவில் சுட்டுக்கொண்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் ராஜிவ் மேனன்.
காடுகளைப் பற்றிக் கேட்டால் முகத்திலும் குரலிலும் பரவசம் மாறாமல் பேச ஆரம்பிக்கிறார் ராஜிவ்மேனன்: “காட்டுக்குள் ஏகப்பட்ட அனுபவங்கள். எத்தனை முறை போனாலும் காடு அலுக்கவே அலுக்காது.
உயிரினங்களைப் பார்ப்பது போரடிக்கவே செய்யாது. அப்படியொரு வாழ்க்கையை உயிரினங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. நமக்குத்தான் வாழத் தெரியலை.’’ என்று ஏக்கத்துடன் கூறுகிறார். காடுகளில் அவர் தேடிய புலிகளை இந்தப் படங்களின் வழியே நாமும் காணலாம்.