கரும்புப் பயிரிலும் ராணுவப் படைப்புழுக்கள்

கரும்புப் பயிரிலும் ராணுவப் படைப்புழுக்கள்
Updated on
1 min read

ராணுவப் படைப்புழுக்கள் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் சோளம், பருத்தி, மக்காச்சோளம் ஆகிய பயிர்களைத் தாக்கிச் சேதப்படுத்தியது கடந்த ஆகஸ்ட் மாதம் கண்டறியப்பட்டது. இப்போது இந்த வரத்துப் படைப்புழுக்கள் கரும்புப் பயிரையும் தாக்கியிருப்பது கண்டறியப்ப்பட்டுள்ளது. ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் மத்திய கரும்பு அபிவிருத்தி ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த பூச்சியியலாளர்கள் மேற்கொண்ட கள ஆய்வில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு கரும்புப் பயிர்களில் இது மாதிரியான வரத்து ராணுவப்புழுக்களின் தாக்கம் பதிவுசெய்யப்பட்டது இல்லை என்கிறார் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் பக்‌ஷி ராம். இந்தப் படைப்புழுக்கள் வட அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டவை. விழிப்புணர்வுடன் செயல்பட்டால் இந்தப் படைப்புழுக்களைப் பூச்சிகொல்லிகள் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்றும் ராம் கூறியுள்ளார்.

கால்நடை வளர்ப்பு இலவசப் பயிற்சி

கடலூர் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் விவசாயிகளுக்காக இலவச ஒரு நாள் பயிற்சிகளை நடத்திவருகிறது. கடந்த வாரம் நாட்டுக் கோழி வளர்ப்பு, முயல் வளர்ப்பு ஆகிய பயிற்சிகளை நடத்தி முடித்திருக்கிறது. வரும் 18-ம் தேதி கறவை மாடு வளர்ப்புப் பயிற்சியையும் 26-ம் தேதி வெள்ளாடு வளர்ப்புப் பயிற்சியையும் நடத்தவுள்ளது.

கடலூர், செம்மண்டலத்தில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் பங்கு பெறக் கட்டணம் எதுவும் கிடையாது.  04142-290249 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு முன்பதிவு செய்யகொள்ள வேண்டியது அவசியம் என இணைப் பேராசிரியர் முரளி தெவித்துள்ளார்.

தளர்த்தப்படுகிறது ஏற்றுமதிக் கட்டுப்பாடு

புதிய விவசாய ஏற்றுமதி கொள்ளைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இந்திய விவசாயிகளின் வருமானம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்புதல் மூலம் தேயிலைத் தூள், காபி பவுடர், அரிசி போன்ற விவசாயப் பொருட்கள் மீதான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். இந்நடவடிக்கையால் இந்திய விவசாயப் பொருட்களுக்குச் சர்வதேச சந்தையில் நல்ல விலை கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in