உங்கள் ‘கிளைமேட்டிட்யூட்’ என்ன?

உங்கள் ‘கிளைமேட்டிட்யூட்’ என்ன?
Updated on
1 min read

இன்னும் சில வாரங்களே இருக்கின்றன. டிசம்பர் 2 முதல் 14-ம் தேதிவரை, போலந்து நாட்டில் உள்ள கட்டோவிஸ் எனும் நகரத்தில் பருவநிலை மாற்றம் தொடர்பான உலக நாடுகளின் 24-வது மாநாடு நிகழ இருக்கிறது.

இந்நிலையில், பருவநிலை மாற்றத்தில் ஒவ்வொரு தனி மனிதரின் பங்களிப்பு என்ன என்பது குறித்து ஆன்லைனில் பல்வேறு விதமான ‘வினாடி வினா’ வகைக் கேள்விகளைக் கேட்டு, அதற்கான மதிப்பெண்களையும் வழங்கி வருகிறது ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பருவநிலை மாற்றத்துக்கான அமைப்பு.

அதன் ஒரு பகுதி, பருவநிலை மாற்றம் எனும் சூழலியல் பிரச்சினை குறித்து நம்மில் எத்தனை பேர் போதிய அறிவுடனும் விழிப்புணர்வுடனும் இருக்கிறோம் என்பதை நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள, 8 கேள்விகள் அடங்கிய ஒரு வினாடி வினாவை தன் வலைத்தளத்தில் அந்த அமைப்பு நடத்துகிறது. கிட்டத்தட்ட போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் ‘ஆப்டிட்யூட்’ போன்று இது, ‘கிளைமேட்டிட்யூட்!’

எட்டுக் கேள்விகளும் நம்முடைய தினசரி வாழ்க்கை முறை தொடர்பான, எளிய கேள்விகளாகவே உள்ளன. என்ன… அந்தக் கேள்விகளுக்கு நாம் நேர்மையாகப் பதில் அளிக்க வேண்டும். அந்தக் கேள்விகளை எதிர்கொண்டவுடன், பருவநிலை மாற்றம் குறித்து நம் அறிவு எவ்வளவு இருக்கிறது என்பதை உடனுக்குடன் சொல்லிவிடுகிறது. அங்கிருந்து, அந்தப் பிரச்சினை குறித்து முழுமையாக அறிந்துகொள்ள நாம் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்பதையும் உங்களுக்கு அது சொல்லும்.

கேள்விகள் அனைத்தும் ஓரளவு எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் புரிந்துகொள்ளும் வகையில், எளிமையான ஆங்கிலத்தில் இருக்கின்றன. ஆங்கிலம் தெரியாதவர்கள், ஆங்கிலம் தெரிந்தவர்களின் உதவியுடன் அந்த வினாடி வினாவை எதிர்கொள்ளலாம். உலகைக் காப்பாற்றுவதில் படித்தவர், படிக்காதவர் என்ற வித்தியாசம் எல்லாம் உள்ளதா என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in