

முமுன்பெல்லாம் பண்டிகைக் காலங்களில் மட்டுமே வான்கோழி இறைச் சியை சாப்பிட்ட நிலை மாறி, தற்போது அனைத்து நாட்களிலும் மக்கள் சாப்பிடு கின்றனர். குறைந்த கொழுப்பு சத்துள்ள இந்த வான்கோழி இறைச்சி, மிகுந்த சுவையுடையதாக இருப்பதால் மக்கள் பெரிதும் விரும்பி சாப்பிடுகின்றனர். தமிழகத்தில் கோழி வளர்ப்புத் தொழிலை போல் வான்கோழி வளர்ப்பு பிரபலமடையவில்லை. எனினும், தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வான்கோழி பண்ணைகள் உள்ளன.
வான்கோழிகளை மேய்ச்சல் அல்லது கொட்டகை முறையில் வளர்க்கலாம். ஒரு வான்கோழிக் குஞ்சுக்கு முதல் நான்கு வாரங்கள் ஒரு சதுர அடியும், 5 முதல் 8 வாரங்கள் வரை 1.5 சதுர அடியும் இடவசதி வேண்டும். விற்பனை வயதில் ஒரு வான்கோழிக்கு 4 சதுர அடி இடவசதி செய்து தர வேண்டும். வான்கோழி குஞ்சுகளை முதல் நான்கு வாரங்களுக்கு கவனமாகப் பராமரித்து வளர்க்க வேண்டும்.