

எழில்மிகு நீலகிரி மலையின் உயர் சிகரமான தொட்ட பெட்டாவின் கீழ் கிளைச்சாலையில் அரிய பறவை ஒன்றைப் பார்த்ததாக ஜனா கூறினார். இதையடுத்து நண்பர் செயப்பிரகாசத்துடன் அப்பகுதிக்குச் சென்று காத்திருந்தோம். அது எழுப்பும் ஒலியைக் கொண்டு, அந்த அரிய பறவையை அறிந்தோம்.
மகிழ்ச்சியுடன் நோக்கியபோது அதன் அலகில் புழு ஒன்றினை வைத்துக்கொண்டு புதர்களுக்கு இடையில் அமர்ந்திருந்தது. தொடர்ந்து ஆறு மனிதக் கண்கள் அதன் செயல்பாட்டினை எதிர்பார்த்துக் கண்காணித்தபடி இருந்தன. தப்ப இயலுமா?