

செங்கல்பட்டு அருகே வெறும் அரை ஏக்கர் நிலத்தில் வான்கோழி, முயல், பங்களா வாத்து, விரால் மீன் வளர்ப்பு என பல பண்ணைகளை அமைத்து அசத்தி வருகிறார் ஒரு விவசாயி. செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே உள்ள அணைக்கட்டு கிராமத்தில் பண்ணை அமைத்துள்ளார் வெற்றிவேல்.
ஒரு ஏக்கர் நிலத்தில், அரை ஏக்கர் நிலத்தை பசுந்தீவன உற்பத்திக்காக ஒதுக்கியுள்ளார். மீதமுள்ள அரை ஏக்கரில் 77 அடி நீளம், 17 அடி அகலமுள்ள ஒரு கொட்டகை அமைத்துள்ளார். 18 அடி உயரமுள்ள இந்தக் கொட்டகையை இரண்டு அடுக்குகளாகப் பிரித்துள்ளார். மேல் அடுக்கில் முயல் வளர்க்கிறார்.