

செப்டம்பர் மாத முன்பனியில் கொடைக்கானல் காட்டின் வாசத்தைச் சுவாசித்து, மேகக்கூட்டத்தை ரசித்துக்கொண்டிருந்தேன். சூரியனின் கதிர் பட்டு விலகிய பனிக்கூட்டத்தின் இடையே மேகப்போர்வை விலகிப் புல்வெளிகள் தெரிந்தன. அந்தப் புல்வெளிப் பகுதியில் தெரிந்தவை நீலக்குறிஞ்சி தாவர மலர்கள்.
அதேநேரம் நீலகிரி மாவட்டம், கூடலூரில் 8 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப்பூ குறித்த செய்தி சமீபத்தில் வந்துள்ளது. பொதுவாக, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூப்பதாகவே குறிஞ்சி மலர்கள் அறியப்பட்டுள்ளன. அப்படியானால், கூடலூர் குறிஞ்சியும் நீலக்குறிஞ்சியும் ஒன்றா, வேறா என்கிற கேள்வி எழுலாம்.