

இந்தியாவில் 3,682 புலிகள் வாழ்வதாக 2022இல் மத்திய வனத் துறை மேற்கொண்ட கணக்கெடுப்பு கூறுகிறது. உலகில் வாழும் 70 சதவீதக் காட்டுப் புலிகள் இந்தியாவில் உள்ளன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் காப்பகங்களுக்கு வெளியில் இருக்கும் சிறு காடுகளையும் கிராமங்களையும் பகிர்ந்துகொண்டு வாழ்ந்துவருகின்றன.
காடழிப்பு, காடுகளுக்குள் சாலைகள், அணைகள் போன்ற ஆக்கிரமிப்புகளால் காடு நெருக்கடிக்கு உள்ளாகிறது. இதனால் மான், காட்டுப்பன்றி, காட்டு மாடுகள் போன்ற தாவரஉண்ணிகளின் எண்ணிக்கை குறைவது, புலிகளுக்கு இரை தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறது.