

யுரேகா! யுரேகா! என்கிற அர்கிமிடிஸின் மகிழ்ச்சிக் குரல் இரண்டாயிரம் ஆண்டுகளாக அறிவியலின் கூக்குரலாக இருந்துவருகிறது. உலகம் மூன்று பங்கு நீராலும், ஒரு பங்கு நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது. நிலத்தைவிட நீர்தான் உயிரினங்களுக்குப் பரிணாமவியல் முன்னோடி.
கடலில், ஆற்றில் நீர்வாழ் உயிரினங்கள் எப்படி நீந்துகின்றன என்பது வியப்பூட்டும் அறிவியல் உண்மை. நீரில் ஒரு பொருள் ஏன் மிதக்கிறது, ஒரு பொருள் ஏன் மூழ்குகிறது என்பது பற்றிய அறிவியல் விதியை அர்கிமிடிஸ் முதன்முதலில் கண்டறிந்தார். சிறிய இரும்பு ஆணி நீரில் மூழ்குகிறது.