

சில வருடங்களுக்கு முன் நியூயார்க் நகரில் உள்ள ஒரு கட்டிடத்தின் 38 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த ஒரு பூனை, சிற்சில காயங்களோடு உயிர்பிழைத்தது. பலருக்கு இது ஆச்சரியத்தைக் கொடுத்தது. உண்மையிலேயே இது சாத்தியம்தானா? சொல்லப்போனால் 1850களிலேயே பூனை உயரத்திலிருந்து விழும்போது உயிர் பிழைக்கிறது என்பது குறித்துப் பல்வேறு அறிவியல் அறிஞர்கள் சிந்தித்திருக்கிறார்கள்.
பூனைகளை எந்த உயரத்திலிருந்து விட்டாலும் அது கால்களால் மட்டுமே முதலில் தரையைத் தொடுகிறது. உடல் முதலில் தொடுவதில்லை. முதன்முதலாக 1969இல் இதற்குப் பின்னால் இருக்கும் அறிவியலை அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இருவர் விளக்கினர்.