

காலஞ்சென்ற இயற்கை வேளாண்மை நிபுணர் நம்மாழ்வார் மேற்கொண்ட வலுவானப் பிரச்சாரத்தின் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் இயற்கை வேளாண்மைப் பெருகியுள்ளது. ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் இல்லாத விவசாயத்தில் பெருமளவு விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர்.
எனினும், விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்காதது உள்ளிட்ட பல காரணங்களால் தொடர்ந்து இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவது பெரும் சவாலாக உள்ளது. இதனால் பெரும்பாலானோர் வேறுவழி தெரியாமல், மீண்டும் வழக்கமான விவசாய முறைக்கே சென்றுவிடுகின்றனர்.