

வெள்ளாடுகள் தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வளர்க்கப்படுகின்றன. எளிய மக்களின் வாழ்வாதாரமாக வெள்ளாடு வளர்ப்புத் தொழில் திகழ்கிறது. மழை கூட சில நேரங்களில் மக்களை ஏமாற்றிவிடும். ஆனால், ஆடுகள் ஒரு போதும் ஏமாற்றுவதில்லை. இதனாலேயே வெள்ளாடுகளை ‘ஏழைகளின் நடமாடும் வங்கி’ என்று அழைக்கின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள இனங்களில், சேலம் கருப்பு ஆடு, கொடி ஆடு மற்றும் கன்னி ஆடு ஆகியவை பதிவுப் பெற்ற சிறப்பு இனங்கள். தமிழ்நாட்டைப் பொருத்தவரை பெரும்பாலும் பழங்கால முறையில்தான் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். பழங்கால முறைகளுடன் நவீன தொழில்நுட்பங்களையும் இணைத்து செயல் படுத்தும்போது ஆடு வளர்ப்பு என்பது நல்ல லாபம் ஈட்டித்தரும் முழுநேரத் தொழிலாக அமையும்.