

வசந்த காலம் என்பது வளத்தின், உற்பத்தியின், மகிழ்ச்சியின் குறியீடு. மழை நமக்குப் பிடிக்கும் என்றாலும், எல்லா நாளும் மழை பெய்வதை விரும்புவோமா? நம் உடலுக்கும் நிலத்துக்கும் மிதமான வெயில் எப்போதும் தேவை. அதைத் தொடர்ச்சியாகத் தருவதால்தான் வசந்தகாலத்தைத் தாவரங்கள், உயிரினங்கள் தொடங்கி மனிதர்களும் வரவேற்கிறார்கள்.
காலை நடைப்பயிற்சிகள் உடலுக்கும் மனதுக்கும் உற்சாகத் தொடக்கத்தை அளிக்கக்கூடியவை. அதிலும் வசந்தகால நடைப்பயிற்சிகள் குறித்துக் கேட்கவே வேண்டாம்.