

மரபு அரிசி வகைகளில் தின்பண்டங்களைத் தயாரிக்கும் சென்னையைச் சேர்ந்த 'செம்புலம்' அமைப்பு, இந்த தீபாவளிக்கு இரண்டு தின்பண்டப் பொதிகளை வெளியிட்டுள்ளது. ஹெரிடேஜ் பைட்ஸ் என்பது மரபு அரிசி வகை பிஸ்கட் பொதி.
பொதுவாக நாம் சாப்பிடும் பிஸ்கட்களில் இருக்கும் மைதா-குளூட்டன்-பாமாயில்-வெள்ளைச் சர்க்கரை சேர்க்கப்படாத பிஸ்கட்கள் இவை. முல்லன் கைமா அரிசியில் செய்யப்பட்ட பட்டர் பைட்ஸ், கறுப்புக் கவுனி அரிசியில் செய்யப்பட்ட சாகோ டிலைட், தங்கச் சம்பா அரிசியில் செய்யப்பட்ட வீகன் டிலைட், சீரகச் சம்பா அரிசியில் செய்யப்பட்ட ஷார்ட் பிரட் ஆகிய நான்கு வகைகள் இந்தப் பொதியில் உள்ளன.