

கிராமங்களுக்குச் செல்லும் போது உயரம் உயரமான, பழமைவாய்ந்த உள்நாட்டு மர வகைகளை முன்பெல்லாம் பார்க்க முடிந்தது. அத்தகைய மரங்கள் தற்போது குறைந்து வருகின்றன.
நான்குவழிச் சாலை, ஆறுவழிச் சாலை, போக்குவரத்துக்கு இடையூறு, ஸ்மார்ட் சிட்டி என்று பல்வேறு பெயர்களில் இன்றைக்கு நடைமுறைப்படுத்தப்படும் அதிவேக வளர்ச்சிமயக்கத்தில் மரங்கள் கண்மூடித்தனமாக வெட்டப்படுகின்றன.