இயற்கையைத் தேடும் கண்கள் 17: மீன்கொத்தியே… மீன்கொத்தியே…

இயற்கையைத் தேடும் கண்கள் 17: மீன்கொத்தியே… மீன்கொத்தியே…
Updated on
1 min read

மீன்கொத்திப் பறவை இனங்களில் மிகப் பெரியது வெண்தொண்டை மீன்கொத்தி (ஒயிட் த்ரோட்டட் கிங்ஃபிஷர்). இவற்றின் தொண்டைப் பகுதி வெண்மையாக இருப்பதால் இந்தக் காரணப் பெயர். நீர்நிலைகளில் இதை அதிகம் பார்க்க முடியும்.

இது ஒரு பிரதேசப் (டெரஸ்ட்ரியல்) பறவை. அதாவது, குறிப்பிட்ட ஓரிடத்தில் தனக்கான உணவு இருக்கிறது என்று தெரிந்தவுடன், அதே இடத்துக்கே திரும்பத் திரும்ப வரும் குணம் கொண்டது.

இந்தப் பறவை, மரத்தில் கூடு கட்டாது. மாறாக, மண் பாங்கான இடத்தில், பொந்து மாதிரியான அமைப்பை ஏற்படுத்தி, அதற்குள் இவை முட்டையிடும்.

விவசாயத்துக்கு ஊறு செய்யும் எலிகள் போன்றவற்றைப் பிடித்து உண்பதால், இந்தப் பறவைகள் விவசாயிகளுக்கு நண்பராக உள்ளன. ஆனால் அதே நேரம், ஒடிசாவில் உள்ள மங்கலஜோடி போன்ற இடங்களில், மீனவர்கள் தாங்கள் பிடித்து வரும் மீன்களைத் தங்கள் பகுதிகளில் காய வைத்திருக்கும் நேரத்தில், அவற்றை வந்து உண்பதால், மீன்கொத்திகள் மீனவர்களுக்குப் பகைவர்களாகவும் மாறிவிடுகின்றன.

மீன்கள்தாம் இவற்றின் முக்கிய உணவு. என்றாலும், வெட்டுக்கிளி போன்ற பூச்சிகள், பல்லிகள், தவளைகள் போன்ற ஊர்வன உயிரினங்கள் போன்றவற்றையும் இந்தப் பறவைகள் சாப்பிடும்.

என்னுடைய ஒளிப்படத் துறை அனுபவத்தில், மீன்கள், மீன்கள் அல்லாத உயிரினங்கள் ஆகியவற்றைச் சாப்பிடும் வெண்தொண்டை மீன்கொத்திப் பறவைகளைப் படமெடுத்து, அதை ஆவணப்படுத்தியுள்ளேன். அந்தப் படங்கள்தாம் இங்கே…!

கட்டுரையாளர்,காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: rrathika@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in