

தென்னமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டு, நம் நாட்டில் மூலைக்கு மூலை இருக்கும் தூங்குமூஞ்சி மரத்தின் மலரை அறிந்த அளவுக்கு, நம்மில் பலருக்கு வாகை மலரைத் தெரியாது. இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றுபோலிருக்கும். நடிகர் விஜய் தொடங்கியுள்ள கட்சியின் பெயர், கொடி என எல்லா அம்சங்களிலும் வெற்றியை-விஜயத்தை மையப்படுத்திய அம்சங்கள் இடம்பெற வேண்டும் என யாரோ ஆலோசனை கூறியிருக்கிறார்கள்.
அதனால் வாகை மரத்துக்கு அடித்தது வாய்ப்பு. வரும் சட்டப்பேரவைத் தேர்தல்வரை வாகை மலரைத் தாங்கிய அந்தக் கட்சியின் கொடி பரவலாக வைக்கப்படலாம். ஆனால், அதேநேரம் வாகை மரத்தைக் காட்டச் சொன்னால், அந்தக் கட்சியைச் சேர்ந்த யாராவது ஒருவரால் அடையாளம் காட்ட முடியுமா? கஷ்டம்தான்.