

காலநிலை மாற்றத்தால் பெரிதும் பாதிக்கப்பட இருப்பவை தாவரங்கள். காடுகளில் மட்டுமல்லாமல் பயிர்த்தாவரங்களும் பாதிக்கப்பட இருக் கின்றன. இந்தப் பின்னணியில் தாவரங்களின் முக்கியத்துவம், காலநிலை மாற்றத்தால் தாவரங்களில் ஏற்படும் மாற்றங்கள், தாவரங்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
இந்தப் பின்னணியில் ‘தாவரங்கள், காலநிலை மாற்றம் & உயிர்ச்சூழல் பாதுகாப்பு’ என்கிற முழு நாள் கருத்தரங்குக்கு ‘சூழல் அறிவோம்’ குழு ஏற்பாடு செய்துள்ளது.