

அசோக மரத்தைப் பார்த்திருக்கிறீர்களா என்று யாரிட மாவது கேட்டால், “இது என்ன பிரமாதம். இந்தா நெட்டுக்குத்தா நிக்குதே, இந்த மரத்தை எப்படித் தெரிந்து கொள்ளாமல் இருக்க முடியும்?” எனப் பதில் வந்து விழும். குறிஞ்சி நிலத் தாவரங்களில் ஒன்றாகச் சங்க இலக்கியங்களில் பதிவாகியிருக்கிறது நிஜ அசோகம்.
இது படர்ந்து குடைபோல் வளரக்கூடியது. நெட்டிலிங்கத்துடன் ஒப்பிட்டால் இதன் மலர்கள் ஆரஞ்சும் சிவப்புமாகக் கவர்ச்சிகரமானவை. ஆனால், அதை விட்டுவிட்டு நெடுநெடுவென வளரும் நெட்டிலிங்க மரத்தையே அசோகம் என நெடுங்காலமாகத் தவறாகச் சுட்டிவருகிறோம்.