

முள்ளம்பன்றிகளை விலங்குக் காட்சி யகங்களில் பார்த்திருப்போம். அதைவிடச் சிறிதான முள் போர்த்திய உடலைக் கொண்ட முள்ளெலிகளைப் பற்றி பரவலாக அறியப்படவில்லை. ஆபத்து வந்தால் பந்துபோல் உடலைச் சுருட்டிக்கொள்ளும் முள்ளெலிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்கின்றன.
காடுகள், புதர்கள் அழிக்கப்பட்டதாலும், நாட்டுமருந்து சார்ந்த தவறான நம்பிக்கைகளாலும், இரவில் சாலைகளைக் கடக்கும்போது வாகனங்களில் அடிபட்டும் இவை பலியாகின்றன. சிறிதாக இருந்தாலும் உயிர்ப்பன்மையின் முக்கியக் கண்ணி யாகவும், பூச்சிகள்-சிற்றுயிர்களைச் சாப்பிட்டு சூழலியல் சேவைகளும் புரியும் முள்ளெலிகள் பற்றி அறியத்தருகிறது கோவை சதாசிவம் எழுதியுள்ள இந்த நூல். தமிழ்நாட்டில் அதிகம் வாழ்ந்துவரும் முள்ளெலி வகை சென்னை முள்ளெலி.