

மனிதனின் ஆரம்ப கால வழிபாடு மரத்திலிருந்து தொடங்கியதை அறிவோம். மரத்திற்கும் மனிதனுக்குமான பிணைப்பு வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது. பன்னெடுங்காலமாகப் பல வழிகளில் மனிதச் சமூகம் தாவரங்களுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது. அதில் முக்கியமான ஒன்று கோயில் நந்தவனம்.
நந்தவனம் என்பது பூஞ்செடிகள் மட்டுமல்லாது இயல் மரங்கள், மூலிகைச் செடிகள் ஆகியவற்றையும் உள்ளடக்கியது. பெரும்பாலும் பழங்கால சிவன், பெருமாள், முருகன் கோயில்களில் நந்தவனங்கள் காணப்படும். இவற்றைப் பராமரிக்கவும், அதில் இருந்து எடுக்கப்படும் பூக்களை மாலையாகத் தொடுப்பதற்கும் ‘நந்தவனக் குடி’ என்று ஒரு சமூகமே இருந்துள்ளது.