

தெற்காசியாவிலேயே மிக நீளமான கடற்கரையைக் கொண்டது இந்தியா (8,100 கி.மீ.). இதன் முற்றுரிமைப் பொருளாதாரக் கடற்பரப்பு 20 லட்சம் ச.கி.மீ. மாலத்தீவுகளின் முற்றுரிமைப் பொருளாதாரக் கடற்பரப்பு 8.6 லட்சம் ச.கி.மீ. மீன்வளமும் சுற்றுலாவும் மாலத்தீவின் முதன்மைப் பொருளாதாரக் கூறுகள்.
அந்நாட்டின் உற்பத்தியில் 6% மீன்வளத்திலிருந்து வருகிறது; மீன்வளம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 11% மக்களுக்கு வேலையளிக்கிறது; மாலத்தீவின் ஏற்றுமதியில் 99% மீன் உணவு. தீவு மக்கள் எல்லாரும் மீன் உண்பவர்கள். உலகிலேயே அதிக அளவு மீன் உண்பவர்கள் மாலத்தீவினர். சராசரியாக ஒருவர் ஆண்டுக்கு 144 கிலோ மீன் உண்கிறார்.