

கோடை விடுமுறையில் என் எட்டு வயது மகளுடன் ஒரு மலைப்பகுதியில் பறவை நோக்கும் பயிற்சிக்குச் சென்றிருந்தேன். அங்குப் பல வகைப் பறவைகளை வழிகாட்டுதலுடன் கண்டுவிட்டு, சென்னை வந்து வீட்டிற்கு அருகில் பறவைகளைத் தேட ஆரம்பித்தேன். வீட்டிற்கு அருகில் புற்கள் மண்டி இருக்கும் காலி நிலத்தில் சிறு பறவைகள் இரண்டைக் கண்டேன்.
அவை கறுப்புப் புள்ளிகள் கொண்ட பொன்னிறத் தலையும், அதேபோல் மேல் உடலும், கழுத்தில் கறுப்புப் பட்டையும், வெள்ளைக் கீழுடலும், வெளுத்த கால்களும் கொண்டிருந்தன. இரண்டும் புல்தரையில் தம் அலகால் கொத்திக் கொண்டிருந்தன.