

‘நிமெசுலைடு’ (Nimesulide) மருந்தைக் கால்நடைப் பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்வதாக மத்திய அரசின் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. அரிய பறவைகள் ஆக்கப்பட்டுவிட்ட பாறு கழுகுகளின் அழிவுக்கு இந்த மருந்து காரணமாக இருக்கிறது. இந்த நடவடிக்கையைப் போல இன்னும் பல நடவடிக்கைகள் தேவைப் படுகின்றன:
* இனி புதிய மருந்துகள் கால்நடைப் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படுவதற்கு முன், அம்மருந்து களால் வேறு உயிரினங்களுக்குப் பின்விளைவுகள் நேருமா என்பதை இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் (Indian Veterinary Research Institute) ஆராய்ந்து பரிந்துரைத்த பின்னரே அனுமதிக்க வேண்டும்.