

ரசித்து ருசித்து உணவை உட்கொண்டால்தான், அது நம் உடம்பில் ஒட்டும் என்பார்கள். ஒரு முறை உணவின் சுவை பிடித்துவிட்டால், அதையே மீண்டும் சாப்பிடத் தோன்றும். இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகளைப் பயன்படுத்தித் தயாரிக்கும் உணவு வகைகளின் சுவையே தனி. அதில்தான் உணவின் உண்மையான சுவை எது என்பதையும், நம்மால் உணர முடியும்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆத்யா இயற்கை அங்காடியின் வெற்றிக்குக் காரணம், இந்தக் கடையின் பொருட்கள் தரும் சுவைதான் என்கிறார் கடையின் உரிமையாளர் பத்மா.
தென்காசியில் உள்ள பண்ணையில் இருந்து அரிசி, புளி, கருப்பட்டி, வெல்லம் , கடலை போன்றவை இங்கு நேரடியாக வரவழைக்கப்படுகின்றன. பஞ்சகவ்யம் போன்ற உரங்கள் மட்டுமே பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் இவை. இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட காய்கறிகளில் இருந்து வற்றல் போன்றவை இவர்கள் கைப்பட செய்யப்பட்டவை. இவை அனைத்தும் பயோ-டைனமிக் முறையில் தயாரிக்கப்படுவதால் உணவின் சுவை அதிகரிக்கிறது.
"எங்களிடம் உள்ள கைக்குத்தல் அரிசி மிகவும் நன்றாக உள்ளது என்று கேட்டு வாங்கிச் செல்கிறார்கள். ஹோம் டெலிவரியும் செய்கிறோம். இங்கு வருபவர்களில் பெரும்பாலோர் இயற்கை வேளாண் முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறியில் தயாரிக்கப்பட்ட உணவைச் சாப்பிட்டு, அதன் சுவையை உணர்ந்த பிறகு மீண்டும் தேடி வருகிறார்கள். ரசாயனமில்லா உணவின் சுவை தனியாகத் தெரியும், இதற்கு வேறு எந்தச் சான்றிதழும் தேவையில்லை" என்கிறார் பத்மா.
சிறப்பான பொருட்கள் : கொய்யா, எலுமிச்சை, இயற்கை அழகு சாதனப் பொருட்கள்- ஹென்னா போன்றவை.
தொடர்புக்கு: 04445524433/ 9884624046/ 9442511585 /