கான்கிரீட் காட்டில் 14: தொங்கும் முட்டைப் பைகள்

கான்கிரீட் காட்டில் 14: தொங்கும் முட்டைப் பைகள்
Updated on
1 min read

டத்தில் இருக்கும் சிலந்தி பார்ப்பதற்கு மிகச் சாதாரணமாகத் தோன்றலாம். இது வலை பின்னக்கூடிய சிலந்தி வகையே. கூம்பு வடிவத்தில் வலையைப் பின்னும் இந்தச் சிலந்தியின் வலை பல அடுக்குகளைக் கொண்டது.

இந்தச் சிலந்தி வலையின் மிக முக்கியமான அம்சம், அதில் பத்திரமாகத் தொங்கும் அதன் எதிர்காலச் சந்ததிகளைக் கொண்ட முட்டைப் பைகள் (Egg sac). இவை வரிசையாகவும் வலையின் நடுப்பகுதியிலும் அமைந்திருக்கும். சிலந்தியும் வலையில் மேலிருந்து கீழாகவே தொங்கக்கூடிய பண்பைக் கொண்டது.

நாடு முழுவதும் காடுகள், மரம் நிறைந்த பகுதிகள், வேலிப்புதர்கள், நகர்ப்புறங்களில் தென்படும். 1.2 செ.மீ. நீளம் கொண்ட இந்தச் சிலந்தி முட்புதர்களிலும் குடியிருப்புப் பகுதிகளின் மூலைகளிலும் கூடமைக்கும். இந்தச் சிலந்திகள் ஒரே இடத்தில் கூட்டமாக வாழும் பண்பைக் கொண்டவை.

இதற்கு ஆங்கிலத்தில் Common scaffold spider, Tent web Spider ஆகிய பெயர்கள் உண்டு. அறிவியல் பெயர் Cyrtophora citricola.

அரிதான பண்பைக் கொண்ட இந்தச் சிலந்தியை ஆச்சரியப்படும் வகையில் சென்னை மந்தைவெளியில் உள்ள எங்கள் வீட்டிலேயே ஒரு முறை பார்க்க முடிந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in