

த
மிழகத்தில் உள்ள பறவை இனங்களின் பரவல், அவற்றின் நிலை, அவற்றின் வாழிடங்களின் நிலை ஆகியவற்றை அறிவதற்கு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா நாட்களில், ‘பொங்கல் பறவைக் கணக்கெடுப்பு’ தமிழகம் முழுவதும் பறவை நோக்கர்களால் மேற்கொள்ளப்படுகிறது. அந்தக் கணக்கெடுப்பு இந்த ஆண்டும் நடக்கிறது.
ஜனவரி 13 முதல் 16-ம் தேதி வரை, நீங்கள் இருக்கும் பகுதியில் குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் பறவைகளைப் பார்த்து, அவற்றை இனம் கண்டு, அவற்றின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு, பறவைப் பட்டியல் ஒன்றைத் தயார் செய்ய வேண்டும். பிறகு அந்தப் பட்டியலை, www.ebird.org/india என்ற தளத்தில் பதிவேற்ற வேண்டும். உங்களின் ஸ்மார்ட்போனிலேயே இந்தத் தளத்துக்கான செயலியை (ஆப்) தரவிறக்கிக் கொள்ளலாம்.
இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய இங்கே சொடுக்கவும்: https://birdcount.in/events/regional/pongal-bird-count/pongal-bird-count-2018_tamil/
- நவீன்