

விவசாயிகளிடமிருந்து அனைத்து இயற்கை வேளாண் பொருள்களையும் நேரடியாக கொள்முதல் செய்து விற்பனை செய்யும் பணியை, செம்புலம் (இணையவழி விற்பனையகம்) கடந்த சில வருடங்களாக செய்துவருகின்றது.
உடலுக்கு ஆரோக்கியமான 50க்கும் மேற்பட்ட பாரம்பரிய அரிசி ரகங்கள் இங்கு கிடைக்கின்றன. அரிசி மட்டுமல்லாது பருப்பு, சிறுதானியங்கள், மிளகாய்த் தூள், உப்பு, கடுகு, மிளகு போன்ற மளிகைப் பொருள்களும் கிடைக்கின்றன.
தீபாவளி, பொங்கல் போன்ற சிறப்பு நாள்களில் உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்பு - காரத்தை வழங்கி மகிழும் வகையில் இனிப்பு, காரம், பலகாரம் அடங்கிய பெட்டிகள் தற்போது விற்பனைக்குக் கிடைக்கின்றன. கள்ளிமடையான் முறுக்கு, நவரச அதிரசம் போன்றவை செம்புலத்தின் பிரபலமான பலகாரங்கள். அடுக்கு நெல் மனோகரம், பொருள்விளங்கா உருண்டை, நீலன் சம்பா தட்டை, முக்கூடல் மிக்சர் போன்றவையும் இந்தத் தீபாவளிக்குக் கிடைக்கின்றன.
செம்புலத்தில் விற்பனை செய்யப்படும் இயற்கை வேளாண் பொருள்கள், இனிப்புகளைப் பெற தொடர்புக்கு: 99626 29925 / www.sempulam.com
- எல்னாரா