கடுகு தடை நீக்கக் கோரிக்கை

கடுகு தடை நீக்கக் கோரிக்கை
Updated on
1 min read

மரபணு மாற்றப்பட்ட கடுகைப் பயிரிட மாட்டோம் என அளித்த உத்தரவாதத்தைத் திரும்பப் பெறுவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது. இப்போதுள்ள உள்நாட்டுத் தேவையைச் சமாளிக்கும் வகையிலான கடுகு உற்பத்தி இல்லை; அதனால், இம்மாதிரி மரபணு மாற்றப்பட்ட கடுகை உருவாக்குவது அத்தியாவசியமான தேவை என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.

வெங்காயம் கொள்முதல் அதிகரிப்பு: உள்நாட்டில் வெங்காயத் தேவையைப் பூர்த்திசெய்யும் பொருட்டு மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கான வரியை 40 சதவீதமாக்கியது. இது வெங்காய விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை உருவாக்கியது. வெங்காய உற்பத்தி அதிகம் நடைபெறும் மகாராஷ்டிர மாநிலத்தில் விவசாயிகள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெங்காயத்தை அரசே கொள்முதல் செய்யும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குவிண்டால் ரூ.2,410க்குக் கொள்முதல் செய்யப்படும் என்றும் ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்டதிலிருந்து கூடுதலாக 2 லட்சம் டன் வெங்காயம் விவசாயிகளிட மிருந்து கொள்முதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தக்காளி விலை சீரானது: தக்காளி சாகுபடி முடிந்து சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து தக்காளி விலை ரூ.40வரை குறைந்துள்ளதாக மத்திய வாடிக்கையாளர் நலன் துறை செயலாளர் ரோகித் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

தக்காளி விலை உச்சத்தில் இருந்தபோது தேசியக் கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF), இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (NAFED), தமிழக அரசின் நுகர்வோர் துறை ஆகியவை தக்காளியை நியாய விலையில் விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in