கான்கிரீட் காட்டில் 08: இது எந்த ஊர் அட்டை?

கான்கிரீட் காட்டில் 08: இது எந்த ஊர் அட்டை?
Updated on
1 min read

ங்கே படத்தில் இடம்பெற்றுள்ள அட்டையில் என்ன அபூர்வம் இருக்கிறது? இது நம் தோட்டங்களில் மிகச் சாதாரணமாகப் பார்க்கக்கூடிய ரயில்பூச்சிதானே என்ற கேள்வி வரலாம். உண்மைதான். எங்கள் வீட்டு முற்றத்தில் இந்த அட்டை நாள்தோறும் பார்க்கக்கூடிய ஒன்று. அதைப் பற்றி பலரும் கேள்விப்படாத விஷயத்தை கடைசியில் பார்ப்போம்.

கறுப்பாக இருப்பதாலும், வளைந்து வளைந்து செல்லும்போது ரயிலைப் போன்றிருப்பதாலும் யாரோ இதற்கு ரயில் பூச்சி என்று தமிழில் பெயர் வைத்துவிட்டார்கள். பலருக்கும் இந்த அட்டையைப் பிடிப்பதில்லை. ஈரமான சுவர்கள், குளியலறை, தண்ணீர் குழாய்கள், தண்ணீர் சொட்டும் பகுதி, பாசி பிடித்த இடம் என ஈரப்பதமான இடங்களில் இது மெதுவாக ஊர்ந்து சென்றுகொண்டிருப்பதைப் பார்த்திருக்கலாம். இது அதிகமுள்ள இடங்களில் மாறுபட்ட மணம் வீசும். அதுவே பலருக்கும் பிடிக்காமல் போவதற்குக் காரணம்.

கறுப்பு உடலின் விளிம்புகளில் மஞ்சள் புள்ளிகளுடன் கூடிய இந்த அட்டையின் அறிவியல் பெயர் Harpaphe haydeniana. ஆங்கிலப் பொதுப் பெயர்: yellow-spotted millipede. அத்துடன் almond-scented millipede, cyanide millipede என்றெல்லாம்கூடப் பெயர் உண்டு. பாதுகாப்புக்காக ஹைட்ரஜன் சயனைடு வேதிப்பொருளை வெளியிடக்கூடிய திறனைப் பெற்றதாம் இந்தப் பூச்சி.

இன்றைக்கு தென்னிந்தியாவெங்கும் இந்த அட்டை மிகச் சாதாரணமாகத் தென்படுகிறது. ஆனால், இது நம் நாட்டை பூர்விகமாகக் கொண்டதில்லை. வடஅமெரிக்காவின் பசிஃபிக் கடற்கரைப் பகுதியிலிருந்து நம் ஊரில் பரவிவிட்ட ஒன்று.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in