

உலகளவில் பெருங்கடல்களின் வெப்பநிலை, வரலாறு காணாத விதமாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக, பவளத்திட்டுகள் வெளிறத் தொடங்கியுள்ளன. ஜூலை நடுப்பகுதியில் தெற்கு புளோரிடாவில் கடல்நீரின் வெப்ப நிலை 90 டிகிரி ஃபாரன் ஹீட்டுக்கு (32 டிகிரி செல்சியஸ்) மேல் சென்றது.
இதன் காரணமாக, மத்திய, தென் அமெரிக்காவில் பவளத்திட்டுகள் வெளிறும் அறிகுறிகளை வெளிப்படுத்தத் தொடங்கின. தரவுகளின்படி, முந்தைய 20 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டில்தான் புளோரிடாவின் கடல்நீர் வெப்பநிலை 90 டிகிரி பாரன்ஹீட்க்கு மேல் அதிக நாள்கள் இருந்துள்ளது; 1990களின் நடுப்பகுதியிலிருந்து, கடந்த 20 ஆண்டுகளில் அதிக வெப்பநிலை நிலவிய நாள்களின் எண்ணிக்கை 2,500 சதவீதம் அளவுக்கு அதிகரித் துள்ளது.
மனிதர்களைப் போலவே, பவளத்திட்டுகளாலும் வெப்பத்தின் தாக்கத்தை ஓரளவுக்குத்தான் சமாளிக்க முடியும். அது நீண்ட காலம் நீடித்தால், அதைத் தாங்கும் திறன் பவளத்திட்டுகளுக்கு இருக்காது. தற்போது நிலவும் இந்தக் கடுமையான வெப்பநிலை தொடர்ந்து நீடித்தால், அது பவளத்திட்டுகளுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அறிவியலாளர்கள் எச்சரிக் கின்றனர்.
ஆரோக்கியமானபவளத்திட்டு அமைப்புகள், மனிதர்களுக்குப் பல வழிகளில்முக்கியமானவை. ஆனால், தொடர்ந்து உயர்ந்துவரும் கடல்நீரின் வெப்பநிலை அதன் இருப்புக்கு அச்சுறுத் தலை ஏற்படுத்தி வருகிறது. முக்கியமாக, உலகெங்கிலும் ஏற்கெனவே உடையக்கூடிய நிலையில் உள்ள பவளத்திட்டு களுக்கு இத்தகைய உயர் வெப்பநிலை பேரழிவு தரக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தும்.
- நிஷா