

ஜூலை 7, 8, 9 ஆகிய தேதிகளில், சென்னை எல்டாம்ஸ் சாலையில் உள்ள சி.பி. ஆர்ட் சென்டரில் இயற்கை சாயத் துணிகள் கண்காட்சியை ‘இந்தியா ஹேண்ட் மேடு கலெக்டிவ்’ நடத்துகிறது. இந்தக் கண்காட்சியில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தயாரிக்கப்பட்ட கைத்தறி ஆடைகளும் கைவினைப் பொருள்களும் இடம்பெறுகின்றன.
கண்காட்சியில் இடம்பெறும் தயாரிப்புகள்:
# துணிகள்
# சேலைகள், துப்பட்டா, ஸ்டோல்
# பெண்கள், ஆண்கள், குழந்தைகளுக்கான ஆடைகள்
# ஜாக்கெட்டுகள், கோடைக்காலத் தொப்பிகள்
# தரை விரிப்புகள், கூடைகள், பாய்கள், கைப்பைகள்,
# தேங்காய் சிரட்டை, வாழை நார் கைவினைப் பொருட்கள்
மடிக்கணினி பை: இவை அனைத்தும் தாவரங்கள், இயற்கைக் கனிமங்களிலிருந்து உருவாக்கப்பட்ட இயற்கை சாயத்தால் வண்ணமூட்டப்பட்டவை. இந்தக் கண்காட்சியில் சிறப்புத் திரையிடல் உண்டு. இவை தவிர இயற்கை சாயம், கை நூற்பு, தேங்காய் சிரட்டைக் கைவினைப் பொருள்கள் குறித்த பயிலரங்குகளும் நடத்தப்படவுள்ளன.
நேரம்: ஜூலை 7, 8, 9 ஆகிய தேதிகளில் காலை 10.00 மணி முதல் இரவு 8 மணி வரை
இடம்: சி.பி. ஆர்ட் சென்டர், எல்டாம்ஸ் சாலை, சென்னை - 18
கூடுதல் தகவல்களுக்கு: +91 73051 27512ஐத் தொடர்புகொள்ளவும்