

ஒரு வேலைக்கு விண்ணப்பிக்க, கைப்பட விண்ணப்பத்தை எழுதி அலுவலக முகவரிக்கு அஞ்சல் அனுப்பியது எல்லாம் அந்தக் காலம்.
கணினியின் வருகைக்குப் பிறகு வேலைக் கான விண்ணப்பங்கள் மின்னஞ்சல் வழியாக அனுப்பப்பட்டன. இன்றும் இது நடைமுறையில் இருந்தாலும், பொதுவான ஒரு ’சிஸ்டம்’ வழியாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் முறை வந்துவிட்டது.
‘ATS’ என்றால் என்ன? - தகவல் தொழில்நுட்பத் துறை, நிதி மேலாண்மைத் துறை, பெரு நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் அதிக எண்ணிக்கையிலான ஆட்கள் வேலைக்குத் தேவைப்படுகிறார்கள். ஒரு காலிப் பணியிடத்துக்கு நூற்றுக் கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்கக் கூடிய நிலை உள்ளது.
இந்தச் சூழலில் ஒவ்வொரு விண்ணப்பத்தையும் ஆராய்ந்து ‘shortlist’ செய்து ஆட் களைத் தேர்வுசெய்ய அதிக நேரம் தேவைப்படுகிறது. இதனால் வேலைக்குப் புதிதாக ஆள் சேர்க்கும் முறையை எளிமையாக்க ‘ATS’ (Applicant Tracking System) எனும் முறையை நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.
ஒரு நிறுவனத்தின் மனிதவள அதிகாரியிடம் உங்களுடைய ‘ரெஸ்யூம்’ சென்றுசேரும் முன்பு, இந்த ‘ATS’ சிஸ்டத்திடம் ‘பாஸ்’ ஆக வேண்டியது கட்டாயம். ஒருவேளை குறிப்பிட்ட அந்த காலிப் பணியிடத்துக்கு ஏற்ப உங்களுடைய திறன்கள் ‘ரெஸ்யூம்’ இல் சுட்டிக்காட்டப் படாமல் இருந்தால், ‘ATS’ உங்களை நிராகரிப்பதற்கான சாத்தியம் அதிகம். எனவே, இணையத்தளம் வழியே வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் இனி கவனமாக இருக்க வேண்டும்.
நீங்கள் விண்ணப்பிக்க இருக்கும் நிறு வனத்தில் ‘ATS’ பயன்படுத்தப்படு கிறதா இல்லையா என உங்களால் கணிக்க முடியாது. என்கிறபோதும் எல்லாம் ‘அல்காரிதம்’, ‘கீவேர்டு’ மய மாக மாறிவரும் இந்தக் காலத்தில் விழிப்புடன் இருந்து சரியான முறையில் ‘ரெஸ்யூம்’ஐ சமர்ப்பிப்பது நல்லது.
‘ரெஸ்யூம்’இல் இருக்க வேண்டியவை: உதாரணமாக வரைகலை வடிவமைப்பாளர் (Graphic designer) காலிப்பணியிடத்துக்கு ஒருவர் விண்ணப்பிப்பதாக வைத்துக் கொள்வோம். முதலில் உங்களுடைய ‘ரெஸ்யூம்’ ஒரு பக்க அளவைத் தாண்டக் கூடாது. கல்வி, வேலை அனுபவம், திறன்கள், தனிப்பட்ட விவரங்கள் என அனைத்தும் ஒரு பக்க அளவிலான ‘ரெஸ்யூம்’இல் சுருக்கிவிட வேண்டும். நீங்கள் பகிரும் தகவல் சுருக்கமாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டியது அவசியம்.
உங்களுடைய ‘ரெஸ்யூம்’.doc,.docx அல்லது PDF வடிவில் சேமித்து வைத்து அனுப்பினால் நல்லது. வரைகலை வடிவமைப்பாளர் காலிப் பணியிடத்துக்கு என இருக்கும் பொதுவான சில ‘கீவேர்டு’களை உங்களுடைய ‘ரெஸ்யூம்’இல் பயன்படுத்த லாம்.
Graphic Design, Adobe Creative Suite, Adobe Photoshop, Adobe illustrator, Branding, UX/UI Design, Typography போன்று முக்கியமான மென் பொருள்கள், வேலைகள் போன்றவற்றில் உங்களுக்குத் தெரிந்த வற்றைக் குறிப்பிட வேண்டும்.
முக்கிய மாக உங்களுடைய ‘ரெஸ்யூம்’இல் எழுத்துப் பிழை, தகவல் பிழை இல்லா மல் இருக்க வேண்டியது அவசியம். இப்படி ஒவ்வொரு வேலைக்கும் ஏற்ப ‘கீவேர்டு’ மாறலாம். சரியான ‘ரெஸ்யூம்’ஐ சமர்ப்பித்து ‘ATS’ சிஸ்டத்திடம் ‘பாஸ்’ மதிப்பெண்கள் வாங்கினால்தான், வேலைவாய்ப்பின் அடுத்தக்கட்டத்துக்குச் செல்ல முடியும்.