சமூக மாற்றத்துக்கான படிப்பு - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 38

சமூக மாற்றத்துக்கான படிப்பு - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 38
Updated on
1 min read

சமூக, பண்பாட்டு, சுற்றுச் சூழல் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அதற்கு நிலைத்த தீர்வை உருவாக்கத் தொழில்முனைவுத் திறன்களைப் பயன் படுத்தும் அணுகுமுறையே சமூகத் தொழில்முனைவு (Social Entrepreneurship).

வழக்கமான தொழில்முனைவோர் தங்கள் வெற்றியை லாபத்தின் அடிப்படையில் அளவிடுவார்கள். ஆனால், சமூகத் தொழில்முனை வோர், சமூகத்தில் ஏற்படுத்தும் நேர்மறை தாக்கத்தையும் வெற்றியின் அளவுகோலாகக் கருதுகின்றனர்.

அரசுத் திட்டங்களும் தனியார் நிறுவனங்களும் சென்றடைய முடியாத சில வெற்றிடங்களைச் சமூகத் தொழில்முனைவு நிரப்புகிறது. எடுத்துக்காட்டுக்கு, ஒரு சமூகத்துக்குத் தற்காலிகமாக உதவுவதற்குப் பதிலாக, அந்தச்சமூக மக்கள் தாங்களாக வருமானம் ஈட்டும் வகையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவது இதன் நோக்கமாகும்.

சமூக நலனையும் தொழில் முனைவுத் திறனையும் இணைக்கும் இந்த அணுகுமுறை, நீண்ட கால மாற்றத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

மாறுபட்ட வாய்ப்புகள்

கல்வி, சுகாதாரம், விவசாயம், பெண்கள் முன்னேற்றம், திறன் மேம்பாடு, குடிநீர், கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல துறைகளில் சமூகத் தொழில்முனைவோர் இன்று செயல்பட்டு வருகின்றனர்.

கிராமப்புற மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்புகள் குறித்த தகவல்களை வழங்கு வது முதல் சிறு தொழில்முனைவோருக்கு நிதி ஆதரவை ஏற்படுத்தித் தருவதுவரை பல்வேறு வடிவங்களில் இவர்களின் பங்களிப்பு உள்ளது.

சமூகத் தொழில்முனைவு பல்வேறு வடிவங்களில் வளர்ந்து வருகிறது. குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்காக மலிவானவிலையில் பொருள்கள் சேவை களை உருவாக்கும் ‘Frugal Inno vation’ மாதிரியும் அதில் ஒன்று.

சூரியசக்தி விளக்குகள், குறைந்த செலவிலான சுகாதாரப் பொருள்கள் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகள். அதேபோல், அண்மைக் காலமாக லாபத் துடன் சமூக - சுற்றுச்சூழல் பொறுப்புணர்வையும் இணைத்துச் செயல்படும் ‘B Corporation’ வகை நிறுவனங் களும் உலக அளவில் கவனம் பெற்றுவருகின்றன.

இந்தியாவிலும் உலகிலும் சுகாதாரம், கல்வி, ஆற்றல், வாழ்வாதாரம் போன்ற துறை களில் செயல்படும் சமூகத் தொழில்முனைவு அமைப்புகள், அவற்றின் வெற்றிக் கதைகள் ஆகியவற்றுடன் சமூகத் தொழில்முனைவைப் படிக்கவும் அதில் தொழில் வாய்ப்புகளை உருவாக்கவும் உள்ள கல்வி, பயிற்சி வாய்ப்புகள் குறித்து அடுத்தடுத்த பகுதிகளில் விரிவாகப் பார்ப்போம்.

- கட்டுரையாளர், உயர் கல்வி ஆலோசகர்; ticf@indiacollegefinder.org

சமூக மாற்றத்துக்கான படிப்பு - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 38
அன்றாடம் பயன்படுத்தப்படும் Gகள்! - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 37

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in