மாறும் நிதி தொழில்நுட்பம்: உஷாராக வேண்டியது யார்? வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 9

மாறும் நிதி தொழில்நுட்பம்: உஷாராக வேண்டியது யார்? வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 9
Updated on
3 min read

எந்தத் துறையானாலும் பாடப்புத்தகங்களைத் தாண்டி உலகளாவிய மாற்றங்களை மாணவர்கள் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். அப்படியான தேடலே மிகச்சிறந்த எதிர்காலத்துக் கான அடிப்படை. சென்ற வாரம் ஃபின்டெக் துறையின் அசுர வளர்ச்சியைப் பற்றிப் பார்த்தோம்.

இணையத் தொழில்நுட்பம் வந்ததற்குப் பிறகு வணிகம், வங்கி நடைமுறைகள், பரிவர்த்தனைகள் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டன. பாடப்புத்தகங்களுக்கு அதெல்லாம் வந்துசேர இன்னும் சில காலமாகும். என்கிறபோதும், வணிகவியல் மாணவர்கள் தேடிச் சென்று கற்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் சில:

கிராஸ் பார்டர் பேமெண்ட் (Cross-Border Payment): யு.பி.ஐ. தொழில்நுட்பம், பணப்பரிவர்த்தனையை மிகவும் எளிதாக்கி விட்டது. இதனால் நொடிப்பொழுதில் பணத்தை அனுப்ப முடிகிறது. ஒவ்வொரு நாடும் தங்களுக்கு இணக்கமான, வர்த்தகத் தொடர்புள்ள நாடுகளோடு கிராஸ் பார்டர் பேமெண்ட் பரிவர்த்தனையை நடத்துகின்றன. எட்டு ஆசிய நாடுகள் தங்களுக் குள்ளாக கிராஸ் பார்டர் பேமெண்ட் பரிவர்த்தனை செய்துகொள்ள ஒப்பந்தம் இட்டுக்கொண்டுள்ளன.

இந்த கிராஸ் பார்டர் பேமெண்ட் சுற்றுலாத் துறை, சுகாதாரத் துறை, சர்வதேச வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நடைமுறைகளை எளிமைப்படுத்தும். இனி வருங்காலங் களில் உலகத்தை ஒற்றைப் புள்ளியில் இணைத்து இந்த கிராஸ் பார்டர் பேமெண்ட் முறை வியாபித்துவிடும். வணிகவியல் பட்டதாரிகள்தான் இதை வழிநடத்த வேண்டியிருக்கும் என்பதால், இந்தத் துறையின் நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

ஃபிராடு பிரிவென்ஷன் அண்ட் மிட்டிகேஷன் (Fraud Prevention and Mitigation): இன்று உலகத்தை அச்சுறுத்தும் மிகப்பெரிய பிரச்சினையாக சைபர் குற்றம் மாறியிருக்கிறது. இதில் டிஜிட்டல் கைதுதான் தற்போதைய டிரெண்ட். தமிழ்நாட்டிலும் அதை நம்பிப் பலர் பல கோடி ரூபாயை இழந்திருக்கிறார்கள். உலகளவில் 2023ஆம் ஆண்டில் மட்டும் ரூ.92.185 லட்சம் கோடி மதிப்பில் இது மாதிரியான நிதி மோசடி நடை பெற்றுள்ளது.

இதில் இருந்து தப்புவது, வங்கிகளுக்கும் நிதி நிறுவனங் களுக்கும் மிகப்பெரும் சவாலாக இருக்கிறது. வணிகவியல் மாணவர்கள் சைபர் குற்றங்கள் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் என்ன என்பதையும் அவற்றைச் சரிசெய்யும் முறைகளை

யும் கற்றுக்கொள்ள வேண்டும். இணையவழியில் எந்த அடையாள மும் இல்லாமல் ஊடுருவும் கொள்ளையர்கள்தான் மிகப்பெரும் சவாலாக இருக்கப்போகிறார்கள். எதிர்காலத் தில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகப்போகும் இத்துறையில் திறம்படப் பணியாற்ற உங்களைத் தயார்படுத்திக்கொள்ளுங்கள்.

ரெகுலேட்டரி எங்கேஜ்மென்ட் (Regulatory Engagement): பண மோசடிகளைத் தடுக்கவும் நியாயமான பொருளாதாரப் பரிவர்த்த னைகளைத் துரிதப்படுத்தவும் உலகத்தை ஒரு வலைப்பின்னலில் இணைந்து முறைப்படுத்துவதே ரெகுலேட்டரி எங்கேஜ்மென்ட். இதற்குப் பல்லாயிரம் வணிகவியல் பட்டதாரிகள் தேவைப்படுவார்கள். பிற பிரிவுகளில் பணியாற்றும் வணிகவியலாளர்களும் இதைக் கற்க வேண்டும்.

அறிவை ஒருங்கிணைத்து, அதை அரணாகக் கொண்டு இணைய வழிப் பண மோசடிகளைத் தடுப்பது தான் இதன் சிறப்பம்சம். மற்ற நாடுகளில் பின்பற்றப்படும் ‘பாலிசி’ முறைகளைப் புரிந்துகொண்டு, இங்கு அதை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியங்கள் குறித்துச் சிந்திக்க வேண்டும்.

நியோ பேங்கிங் (Neo banking): இந்தியாவில் இதை வங்கி என்று அழைக்க முடி யாது, நிதிசார் தொழில்நுட்ப நிறுவனம் என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் இந்திய ரிசர்வ் வங்கி இதை இன்னும் அங்கீகரிக்கவில்லை. உலக அளவில் இந்த இணையவழி வங்கிகளின் சந்தை மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டி விட்டது.

மரபுரீதியான வங்கி நடைமுறைகள் இல்லாமல் ஓரிரண்டு ‘கிளிக்’குகளிலேயே சேவையை முழுமை செய்துவிடும் வாய்ப்பிருப்பதால், உலகம் அதிவேகமாக நியோவங்கிமயமாகி வருகிறது.

வாடிக்கையாளர்களும் பெருகிக்கொண்டிருக் கிறார்கள். இதை வணிகவியல் மாணவர்கள் உள்வாங்கிக்கொண்டு நியோ வங்கி நடைமுறைகளைத் தெரிந்துகொள்வது மிக அவசியம்.

இவை தவிர ஸ்டேபிள் காயின், கிரிப்டோகரன்சி, டிஜிட்டல் டோக்கன் போன்று புதிய நிதித் தொழில்நுட்ப முறைகள் உலகில் வந்துகொண்டே இருக்கின்றன. வணிகவியல் படிக்கும் மாணவர்கள் இது போன்று வளர்ந்துவரும் துறைகளைப் பற்றி ‘அப்டேட்’ ஆக இருக்க வேண்டும்.

சிங்கப்பூர் பேமெண்ட்ஸ் நெட்வொர்க் (SPaN) - சிங்கப்பூர் நாணய ஆணையம் (MAS), வங்கிகள் சங்கம் (ABS) இணைந்து ‘SPaN’ (Singapore Payments Network) என்கிற புதிய அமைப்பைத் தொடங்கவுள்ளன. 2026க்குள் செயல்படவுள்ள இந்த அமைப்பு, FAST, GIRO, PayNow, SGQR உள்ளிட்ட 8 முக்கிய தேசிய கட்டண முறைகளை ஒரே கூரையின்கீழ் கொண்டுவர உள்ளது.

இதுவரை பல்வேறு அமைப்புகள் தனித்தனியாக நடத்திவந்த சேவைகளை ஒருங்கிணைப்பதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கும் வணிகங்களுக்கும் வேகமான, பாதுகாப்பான, எளிமையான டிஜிட்டல் கட்டணச் சேவைகளை வழங்க முடியும். இதன் மூலம் சிங்கப்பூரின் பணப் பரிமாற்ற முறை உலகத் தரத்திற்கு மேம்படும்.

- கட்டுரையாளர், உயர் கல்வி ஆலோசகர்; ticf@indiacollegefinder.org

மாறும் நிதி தொழில்நுட்பம்: உஷாராக வேண்டியது யார்? வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 9
பி.காம். படிப்பில் என்ன புதுசு? - அப்டேட் அவசியம் மாணவர்களே: வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 8

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in