ஆங்கிலம் அறிவோமே 4.0 - 33: மட்டமாகப் புகழ்வது எப்படி?

ஆங்கிலம் அறிவோமே 4.0 - 33: மட்டமாகப் புகழ்வது எப்படி?
Updated on
2 min read

‘Deceptively easy’ என்பதன் விளக்கம் கேட்கிறார் ஒரு வாசகர்.

‘Deception’ என்பது உண்மை அல்லாத ஒன்றை உண்மை என்று பிறரை நம்ப வைப்பது. ஒரு விதத்தில் ‘ஏமாற்று’ எனலாம். என்றாலும் ‘deception’ என்பது எப்போதுமே தவறான நோக்கத்தில் செய்யப்படுவதாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. திருமண விழா ஒன்றில் உணவு ருசிகரமாகவே இல்லை.

திருமணத்துக்கு ஏற்பாடு செய்த உறவினர் ‘சாப்பாடு எப்படி இருந்தது?’ என்று கேட்கிறார். ‘இப்படி ஒரு சாப்பாட்டை நான் இதுவரை சாப்பிட்டதே இல்லை’ என்கிறீர்கள். உறவினர் இதைக் கேட்டுவிட்டு சந்தோஷமாகச் சென்று விடுகிறார். இப்படி ஒரு (மட்டமான) உணவை இதுவரை சாப்பிட்டதில்லை என்கிற அர்த்தத்தில் கூறியிருந்தாலும், அது அப்படித் தோன்றவில்லை. அதுதான் உங்கள் நோக்கமும். இங்கே நீங்கள் வெளிப்படுத்திய செயல் ‘deception’.

‘Magic’ கூட ‘deception’தானே?

இப்போது ‘deceptively easy’ கேள்வி ஒன்று.

‘Day’ என்பது எத்தனை மணி நேரம் கொண்டது?

24 மணி நேரம் கொண்டது ஒரு நாள் என்பது யாருக்குத் தெரியாது? இதிலென்ன ‘deception’ என்கிறீர்களா?

அப்படியெனில் ‘அவன் day and night வேலை செய்தான்’ எனும்போது, ‘day’ என்பதற்கு எத்தனை மணி நேரம்?’ அதாவது, இங்கே ‘day’ என்பது இரவு அல்லாத பகல் பொழுதைக் குறிப்பிடுகிறது. அதாவது, (சுமார்) 12 மணி நேரம். கடந்த காலத்தோடு ஒப்பிட்டு நிகழ்காலத்தைப் பேசுவதற்கும் ‘day’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

‘Vegetarianism is very popular these days’. இதற்குப் பதிலாக ‘nowadays’ என்ற சொல்லைப் பயன்படுத்திவிடலாம். ‘Vegetarianism is very popular nowadays’. ‘I don’t watch TV very much nowadays’. (Nowadays என்று சொல்லுக்கு இடையே இடைவெளியோ, நிறுத்தக் குறிகளோ இருக்கக் கூடாது)

***

‘Excerpt’, ‘extract’ இரண்டும் ஒன்று போலவே தோன்றுகிறதே என்று கருதுகிறார் நண்பர் ஒருவர்.

ஒரு நூல், திரைப்படம், இசை/வீடியோ ஆல்பம் போன்றவற்றிலிருந்து எடுக்கப்பட்ட சிறு பகுதியை ‘excerpt’ என்பார்கள். புத்தகங்களின் காப்புரிமை குறித்து குறிப்பிடும்போது ‘புத்தக விமர்சனங்களுக்காக இந்த நூலின் ‘excerpts’ஐப் பயன்படுத்தப்படலாமே தவிர மற்றபடி இதிலிருந்து எந்தப் பகுதியையும் யாரும் பயன்படுத்தக் கூடாது’ என்று குறிப்பிடுவதைக் கவனித்திருப்பீர்கள்.

‘Extract’ என்றால் எதிலிருந்தோ அது நீக்கப்பட்டிருக்கிறது. பல் பிடுங்கப்பட்டது – ‘The tooth was extracted’.

‘Excerpt’ என்பதில் மூலத்திலிருந்து ஒரு பகுதி எடுத்தாளப்பட்டாலும், அந்த மூலம் அப்படியே இருக்கும். அதாவது, பிரதி எடுப்பது போலத்தான். ‘Extract’ என்பது மூலத்திலிருந்து ஒரு பகுதி நீக்கப்படுவதைக் குறிக்கிறது. ‘The oil was extracted from olives’.

‘After much persuasion the police managed to extract the information from the terrorist’. தீவிரவாதியிடமிருந்து காவல்துறை ஒருவழியாக தேவைப்பட்ட தகவலைக் கறந்துவிட்டார்கள்.

(தொடரும்)

சிப்ஸ்

l She is a strong woman. சரியா?

She is strong. அது போதும்.

l I congradulate you for your success. (எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல் வரி) ‘Congratulate’ என்பதில் எழுத்துப் பிழை. ‘For your success’ அல்ல, ‘on your success’. ‘I congratulate you on your success’ என்பதே சரி.

l நீண்ட காலத்துக்கு முன் வாழ்ந்த, தன் சொந்தக் குடும்பத்தைச் சார்ந்த ஒருவரை எந்தச் சொல்லால் குறிப்பிடலாம்?

‘Ancestor’, ‘forebear’.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in