ஆங்கிலம் அறிவாேமே 4.0 - 33: அந்த ‘guts’ வேணும்!

ஆங்கிலம் அறிவாேமே 4.0 - 33: அந்த ‘guts’ வேணும்!
Updated on
2 min read

‘Keerthana, accompanied by Mala and Sheela, was sent to Mumbai’ என்று ஒரு பேராசிரியர் குறிப்பிட்டிருந்தார். ‘were sent என்றல்லவா இருக்க வேண்டும்?’ என்கிறார் ஒரு வாசகர்.

அந்தப் பேராசிரியர் சரியாகத்தான் குறிப்பிட்டிருக்கிறார். இங்கே Keerthana மட்டுமே ‘subject’. ‘accompanied by’, ‘alongwith’, ‘as well as’ போன்றவை ‘connectives’. எது குறித்து வாக்கியம் தகவலைக் கூறுகிறதோ அது ‘subject’. ‘Raju eats’ என்பதில் Raju என்பது ‘subject’. ‘Raju and Rahul eat’ என்பதில் ‘Raju and Rahul’ என்பது ‘subject’. ‘The house is built of bricks and mortar’ என்பதில் ‘The house’ என்பது ‘subject’.

மேற்படி வாக்கியத்தின் பொருள் ‘மாலா, ஷீலாவுடன் கீர்த்தனா மும்பைக்கு அனுப்பப்பட்டாள்’ என்பதே. ‘மாலா, ஷீலா, கீர்த்தனா ஆகியோர் மும்பைக்கு அனுப்பப்பட்டார்கள்’ என்பதல்ல.

அது போல ‘Coffee as well as tea was served’ என்பதே சரி. Were served அல்ல. கீழே உள்ள இரு வாக்கியங்களுமே சரியானவை என்பதைக் கவனியுங்கள். ஏனென்றால் ‘subject’ற்குத் தகுந்த மாதிரிதான் ‘verb’ இருக்கும்.

’The Managing Director as well as the employees of the organisation is interested in the project’.

’The employees as well as the Managing Director of the organisation are interested in the project’.

***

’Bakery shop gutted in fire in Shimla’ என்று ஒரு செய்தித் தலைப்பை படித்தேன். ‘Gutted’ என்றால் சாம்பலான என்று பொருளா? ஒரு நண்பரின் கேள்வி இது.

‘Gut’ என்பது வினைச்சொல்லாகப் பயன்படுத்தப்படும்போது அது ஒரு விலங்கின் உள்ளுறுப்புகளை நீக்குவது என்றாகிறது. மீனின் உள்ளுறுப்புகளை (சமைத்துச் சாப்பிடுவதற்காக) நீக்குவதை உணர்த்த ‘gut’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்துவதுண்டு.

ஒரு கட்டிடத்தின் உட்பகுதியை அழித்துவிடுவதையும் இச்சொல்லின் மூலம் குறிப்பிடுவார்கள். ‘Bakery shop gutted in fire in Shimla’ என்பதும் இதையே உணர்த்துகிறது. அதாவது, பேக்கரியின் உட்புறம் தீயினால் முழுவதுமாகச் சிதைந்துவிட்டது.

‘இவருடன் நான் நெருங்கிப் பழகுவது ஆபத்து’ என்று காரணமே இல்லாமல் ஒருவரைப் பார்த்தவுடன் தோன்றுவதை ‘gut feeling’ என்பார்கள். திருமண ஜோடியைப் பார்த்தவுடன் ‘I have a gut feeling that this relationship is not going to last’ என்று நீங்கள் நினைத்தால், அவர்களுக்கு இடையே ஒத்துப்போகாது என்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லாமல் உங்களுக்கு அப்படித் தோன்றுகிறது என்று பொருள்.

எதிர்மறை உணர்வின் பிரதிபலிப்பாகவே ‘gut feeling’ பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. ‘எனக்கென்னவோ இந்தத் திருமண ஜோடி இன்னும் நூறு வருடம் ஒற்றுமையாக வாழும் என்று தோன்றுகிறது’ என்பதை ஆங்கிலத்தில் கூறும்போது ‘gut feeling’ என்பதைப் பயன்படுத்துவதில்லை!

அவனுக்கு நிறைய மனத்துணிவு, தைரியம் என்பதை ‘guts’ என்று உணர்த்துகிறோம். தவறுகளை ஒப்புக்கொள்ளவும் ‘guts’ வேண்டும்.

(தொடரும்)

சிப்ஸ்

‘Math’ சரியா? ‘Maths’ சரியா?

l இரண்டும் ‘mathematics’ என்பதன் சுருக்கம். அமெரிக்கர்கள் முன்னது சரி என்பார்கள். பிரிட்டன்வாசிகள் ஆமாம் என்பதை உணர்த்தும் எழுத்தைச் சேர்க்க வேண்டும் என்பார்கள்.

Channel?

l வானொலி அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒலி/ஒளிபரப்பப் பயன்படுத்தப்படும் அலைவரிசை.

AKA என்றால்?

l Alias. Also known as என்பதன் சுருக்கம். ‘ஸ்ரீனிவாச ராமசந்திர மூர்த்தி என்கிற சீனு’ என்பதில் ’என்கிற’தான் AKA.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in