பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை… விண்ணப்பிக்க ரெடியா?

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை… விண்ணப்பிக்க ரெடியா?
Updated on
1 min read

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) பல்வேறு பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் மே 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்கள் விவரம் :

நேரடி பணி வாய்ப்பு:

  • தொழில்நுட்பத் துறை அதிகாரி - 181
  • சயின்டிபிக் உதவியாளர் - 7
  • தொழில்நுட்பவியலாளர் - 24

மொத்த காலிப்பணியிடங்கள் - 212

பயிற்சி பணி வாய்ப்பு:

  • முதல் பிரிவு - 1,216
  • இரண்டாம் பிரிவு - 2,946

மொத்தக் காலிப்பணியிடங்கள் - 4,162

தகுதி:

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படிப்பை முடித்திருக்க வேண்டும். இதில் ஒவ்வொரு பணிக்குமான முன்னுரிமை படிப்புகள் குறித்த விவரங்களைப் பற்றி தெரிந்துகொள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் இணையதளத்தைப் பார்வையிடவும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 18 வயது நிரம்பியவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும் அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. இது குறித்த விரிவான தகவல்களுக்கு 'BARC' அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

https://barconlineexam.com/ என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பதிவுக் கட்டணம் செலுத்தி, தங்களது அடிப்படை விவரங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். பெண்கள், பட்டியலினத்தவர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

முக்கிய தேதி:

மே 22ஆம் தேதிக்குள் இணைய வழியில் மட்டும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு மையம்:

நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, காஞ்சிபுரம், மதுரை ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறும். விண்ணப்பதாரர் தேர்வு எழுதுவதற்கு ஏதேனும் மூன்று தேர்வு மையங்களைத் தேர்ந்தெடுக்கலாம். இதில் ஏதேனும் ஒரு மையம் விண்ணப்பதாரருக்கு ஒதுக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

முதல் நிலைத் தேர்வு, இரண்டாம் கட்டத் தேர்வு, தகுதித்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு https://www.barc.gov.in/careers/vacancy8.pdf என்கிற இணைப்பைப் பார்வையிடவும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in