5369 மத்திய அரசுப் பணிகள்: மார்ச் 27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

5369 மத்திய அரசுப் பணிகள்: மார்ச் 27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!
Updated on
1 min read

பல்வேறு துறைகளில் 5369 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மூத்த தொழில்நுட்ப உதவியாளர், தட்டச்சர், நூலக உதவியாளர் போன்ற பணிகளுக்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து மார்ச் 27ஆம் தேதிக்குள் இணைய வழியில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும்.

தகுதி:

ஒன்றிய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பத்தாம் வகுப்பு, ப்ளஸ் 2, இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வெவ்வேறு பணிகளுக்கான கல்வித்தகுதி பற்றி தெரிந்துகொள்ள எஸ்.எஸ்.சி இணையதளத்தைப் பார்வையிடவும்.

வயது வரம்பு:

2023 ஜனவரி 1 அன்று 18 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. இது குறித்த விரிவான தகவல்களுக்கு எஸ்.எஸ்.சி இணையதளத்தைப் பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

www.ssc.nic.in இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் உள்ள ‘Apply’ என்கிற பொத்தானை அழுத்தவும். அங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து, தேவையான ஆவணங்களைச் சேர்த்துச் சமர்ப்பிக்க வேண்டும். இறுதியாக விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி வெளியேறுங்கள். இணையவழி விண்ணப்பத்துக்கான கட்டணம் ரூ.100ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெண்கள், பழங்குடியினர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பங்களை மார்ச் 27ஆம் தேதி இரவு 11 மணிக்குள் இணைய வழியில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். ஏப்ரல் 3 முதல் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம். ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் தேர்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையம்:

நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் கணினி வழித் தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர், திருநெல்வேலி, கிருஷ்ணகிரி ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறும். விண்ணப்பதாரர் தேர்வு எழுதுவதற்கு ஏதேனும் மூன்று தேர்வு மையங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

கணினி வழி எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_rhq_06032023.pdf என்கிற இணைப்பைப் பார்வையிடவும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in