தனியார் வங்கி வேலைக்கான இலவசப் பயிற்சி: தாட்கோ அறிவிப்பு

தனியார் வங்கி வேலைக்கான இலவசப் பயிற்சி: தாட்கோ அறிவிப்பு
Updated on
1 min read

தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதி திராவிடர், பழங்குடியினரின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காகப் பல்வேறு சுயவேலைவாய்ப்பு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.டி கணக்குகள் நிர்வாக உதவியாளர் பணிக்கான பயிற்சி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரூ. 20,000 மதிப்புள்ள இந்தப் பயிற்சிக் கட்டணத்தை தாட்கோ நிறுவனமே முழுமையாக ஏற்கிறது. இப்பயிற்சியில் பங்கெடுப்பவர்களுக்குத் தங்கும் இடமும் உணவும் இலவசம். 20 நாட்கள் நடைபெறும் இப்பயிற்சியை நிறைவு செய்பவர்களுக்கு எச்.டி.எஃப்.சி, ஐசிஐசிஐ போன்ற தனியார் வங்கிகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி: கணிதப் பாடத்தில் இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்களும், பி.காம், பி.பி.ஏ பட்டப்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரைப் பயிற்சிக்குத் தேர்வு செய்யும் முன் தகுதித் தேர்வு நடத்தப்படும்.

வயது வரம்பு: 18 முதல் 33 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

பயிற்சி விவரம்: 1,200 பேருக்கு இப்பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சியில் வங்கி நிதி சேவைகள், காப்பீடு சம்பந்தமான வகுப்புகள் எடுக்கப்படும். பயிற்சி நிறைவு செய்பவருக்குச் சான்றிதழும், மாதந்தோறும் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை வருமானம் ஈட்டும் வாய்ப்பும் கிடைக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (http://iei.tahdco.com/beautician_reg.php) விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு: http://tahdco.com/admin/Popup/GST_Poster.jpg

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in