

தமிழக அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய 1083 காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக டி.எஸ்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
காலிப்பணியிடங்கள் விவரம்:
1. பணிமேற்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை) - 794
2. இளநிலை வரைதொழில் அலுவலர் (நெடுஞ்சாலைத் துறை) - 236
3. இளநிலை வரைதொழில் அலுவலர் (பொதுப் பணித் துறை) - 18
4. வரைவாளர் நிலை III (நகர் ஊரமைப்பு துறை) - 10
5. முதலாள் நிலை II (சிறுதொழில் நிறுவனத்துறை) - 25
மொத்த காலிப்பணியிடங்கள் - 1083
தகுதி: இந்த காலிப்பணியிடங்களுக்காக விண்ணப்பிக்க இருப்பவர்கள் பல்கலைக்கழக மானிய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில் பயின்றிருக்க வேண்டும். பதவி வாரியாக கேட்கப்பட்டுள்ள கல்வித் தகுதி பற்றிய விவரங்களை டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் பார்க்கலாம்.
வயது வரம்பு:
விண்ணப்பிக்கும் முறை: நடைபெற இருக்கும் எழுத்துத் தேர்வுக்கு https://www.tnpsc.gov.in/ என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் பதிவுக்கட்டணமாக ரூ.150/-ஐ செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். பட்டியலினத்தவர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
முக்கிய தேதிகள்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை, நெடுஞ்சாலைத் துறை, பொதுப் பணித் துறை உள்ளிட்ட துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களுக்கான தகுதியானவர்களை நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்வு மே 27ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் மார்ச் 4ஆம் தேதிக்குள் இணையவழியில் மட்டும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். இணையவழி விண்ணப்பத்தை மார்ச் 9 ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை திருத்தம் செய்து கொள்ளலாம்.
தேர்வு மையங்கள்: சென்னை, கோவை, சிதம்பரம், காஞ்சிபுரம், நாகர்கோவில், மதுரை, உதகை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், காரைக்குடி, தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய ஊர்களில் உள்ள தேர்வு மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர் இதில் ஏதேனும் இரண்டு மையங்களைத் தேர்வு செய்யலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பங்கேற்றவர்களின் மதிப்பெண்களைக் கணக்கில் கொண்டு, இட ஒதுக்கீடு விதியின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
கூடுதல் விவரங்களுக்கு: https://www.tnpsc.gov.in/Document/tamil/05_2023_CESSE_TAM.pdf