

நவ.11: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி உள்பட ஆறு பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
நவ.12: 68 உறுப்பினர்களைக் கொண்ட இமாச்சல பிரதேச சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் 75.6 சதவீத வாக்குகள் பதிவாயின.
நவ.13: ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது.
நவ.13: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக நியூசிலாந்தின் கிரேக் பார்க்லே இரண்டாம் முறையாகப் போட்டியின்றி தேர்வானார்.
நவ.14: தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருதுக்கும், தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா வீராங்கனை ஜெர்லின் அனிகா உள்பட 25 பேர் அர்ஜூனா விருதுக்கும், நான்கு பேர் துரோணாச்சாரியார் விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.
நவ.16: உலக மக்கள்தொகை 800 கோடியை எட்டியதாகக் கணிப்பின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.
நவ.17: மேற்கு வங்க மாநில புதிய ஆளுநராக சி.வி. ஆனந்த் போஸைக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்தார்.
நவ.17: இந்தோனேசியாவின் பாலி தீவில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டின் நிறைவு நாளில் ஜி-20 நாடுகளின் அடுத்தத் தலைமைப் பொறுப்பை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டார்.
நவ.17: நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்புவதற்கு முன்னோடியாக ஆர்டிமிஸ் 1விண்கலத்தை அமெரிக்காவின் நாசா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
நவ.18: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.