Published : 15 Nov 2022 06:34 AM
Last Updated : 15 Nov 2022 06:34 AM

சேதி தெரியுமா?

தொகுப்பு: மிது

நவ.3: பாகிஸ்தானின் குஜ்ரன்வாலாவில் கட்சிப் பேரணியில் பங்கேற்ற முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சுடப்பட்டுப் படுகாயமடைந்தார்.

நவ.4: இந்த ஆண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் தமிழில் பாடப்புத்தகங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

நவ.6: ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

நவ.7: சண்டிகர் சர்வதேச விமான நிலையத்தை ‘ஷாஹுத் பகத்சிங் விமான நிலையம்’ என்று பெயர் மாற்றம் செய்து விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது.

நவ.7: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

நவ.8: தமிழகத்தில் புதிய சரணாலயமாக காவிரி தெற்கு வன உயிரினப் பகுதியை தமிழக அரசு அறிவித்தது.

நவ.8: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித் ஓய்வு பெற்றதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் பதவியேற்றார். இவர் உச்ச நீதிமன்றத்தின் 50ஆவது தலைமை நீதிபதி.

நவ.10: ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிப்பதைக் கட்டாயமாக்கி மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.

நவ.11: மைசூரு - சென்னை இடையே முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பெங்களூருவில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.

தொகுப்பு: மிது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x