சேதி தெரியுமா?

சேதி தெரியுமா?
Updated on
1 min read

அக்.7: தமிழகத்தில் இணையவழி சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கும் அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்கினார்.

அக்.8: இந்திய விமானப் படையில் (ஐஏஎஃப்) வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக ஆயுத அமைப்புகள் (டபிள்யூஎஸ்) என்கிற புதிய கிளையை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

அக்.9: மதம் மாறிய பட்டியலித்தனவருக்கு ‘எஸ்.சி.,’ அந்தஸ்து வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில் மூவர் ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது.

அக்.12: உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட்டைத் தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித் பரிந்துரைத்தார். லலித் நவ.8 இல் ஓய்வு பெறுகிறார்.

அக்.13: கர்நாடகத்தில் ‘ஹிஜாப்’ அணிய விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் மாறுபட்ட தீர்ப்பை இரு நீதிபதிகள் அமர்வு வழங்கியது.

அக்.13: நாட்டின் முதல் தேவாங்கு சரணா லயத்தைத் தமிழகத்தின் கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் 11,806 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கத் தமிழக அரசு உத்தரவிட்டது.

அக்.14: ஊக்க மருந்து பயன்படுத்தியதாக இந்திய வட்டெறிதல் வீராங்கனை கமல்ப்ரீத் கவுருக்கு மூன்று ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப் பட்டுள்ளதாகத் தடகள ஒருமைப்பாடு பிரிவு (Athletics Integrity Unit) அறிவித்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in