Published : 07 Oct 2022 06:14 PM
Last Updated : 07 Oct 2022 06:14 PM

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு பயிற்சிக்கான எளிய முறை குறிப்புகள் - பகுதி 8

ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் குரூப் 1 தேர்வுகள் நவம்பர் 19 அன்று நடத்தப்பட இருக்கின்றன. குரூப்-1 தேர்வுக்கு தயார்செய்துவரும் போட்டியாளர்கள், மாணவர்களுக்கு உதவும் வகையில் ஒவ்வொரு பாடத்துக்குமான எளிய முறை குறிப்புகளை போட்டித் தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர் ஜி.கோபாலகிருஷ்ணன் தொகுத்தளிக்கிறார். கடந்த பகுதியைப் போலவே இன்றைய எட்டாம் பகுதியிலும் ‘பொருளாதாரம்’ பாடத்துக்கான எளிய முறைக் குறிப்புகள் தொடர்கின்றன.


இந்தியப் பொருளாதாரம் -2
எளிய குறிப்புகள்

*ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சர்வோதயா திட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு
- பொ.ஆ . (கி.பி) 1950

*இந்தியா தற்சார்பு மற்றும் தன்னாக்கத் திறன்கொண்ட சமுதாயத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டிருந்த ஐந்தாண்டுத் திட்டம் -
மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டம்(1961-66).
ஆனால் அது பின்னர் பாதுகாப்பை நோக்கமாக கொண்டிருந்தது.

*சீனப் போர் தொடங்கிய ஆண்டு -
1962

*1965 இல் இந்தியா -பாகிஸ்தான் போரின் முடிவில் தாஷ்கண்ட்(10-01-1966) சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்கள்
- லால்பகதூர் சாஸ்திரி, அயூப்கான்

*இந்தியாவில் "வறுமையே ஓடு" என்பதை நோக்கமாக கொண்டிருந்த ஐந்தாண்டு திட்டம்
- ஐந்தாம் ஐந்தாண்டு திட்டம்

*பொது வழங்கல் முறை (PDS) இந்தியாவில் கொண்டு வரப்பட்ட வருடம்
-1967

*தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு (NAFED- National Agriculture Cooperative Marketing Federation of India) தொடங்கப்பட்ட வருடம்
- 1958

*1987 இல் உருவான TRIFED இன் விரிவாக்கம்
Tribal Cooperative Marketing Federation of India Ltd
இந்திய பழங்குடி கூட்டுறவு சந்தைபடுத்துதல் கூட்டமைப்பு

*NCDC (National Cooperative Development Council) தேசிய கூட்டுறவு வளர்ச்சி கவுன்சில் தொடங்கப்பட்ட வருடம்
- 1963

*பேராசிரியர் அமர்தியா சென் நோபல் பரிசு வாங்கிய துறை மற்றும் வருடம்
பொருளாதாரம் (வறுமை கோட்டு ஆய்வு) , 1998.
பாரத ரத்னா விருது பெற்ற வருடம் -1999

*2002இல் உருவாக்கப்பட்ட AICI இன் விரிவாக்கம்
Agricultural Insurance Corporation of India
இந்திய விவசாய காப்பீடு நிறுவனம்

*இந்தியாவில் ஒரு ஹெக்டேருக்கு கீழ் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளைக் குறிக்கும் சொல் -
குறு விவசாயிகள்

* மைய அரசின் வரிகள்
வருமான வரி, அன்பளிப்பு வரி
ஏற்றுமதி வரி, எஸ்டேட் தீர்வை வரிகள் மற்றும் மைய சரக்கு சேவை வரி போன்றவை

*மாநில அரசின் வரிகள்
பதிவு கட்டணங்கள், சொத்து வரி,
தொழில்வரி, மாநில சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி)போன்றவை

*நேர்முக வரிகள்
வருமானவரி, தொழில்வரி, நில வருவாய் வரி,
வேளாண்மை வரி, அன்பளிப்பு வரி மற்றும் செல்வ வரி

*மறைமுக வரிகள்
சுங்க வரி, உற்பத்தி வரி,
கேளிக்கை வரி , எஸ்டேட் தீர்வை வரிகள், சரக்கு மற்றும் சேவை வரிகள் போன்றவை

*ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த 1986 இல் மாற்றியமைக்கப்பட்ட மதிப்பு கூட்டுவரி அப்போதைய நிதி அமைச்சர் வி.பி. சிங் அறிமுகப்படுத்தினார். வாஜ்பாய் அரசு 2002இல் விஜய் கேல்கர் தலைமையின் கீழ் வரி சீர்திருத்த குழுவை உருவாக்கியது. அக்குழு 2005 இல் பரிந்துரை செய்த ஜி.எஸ்.டி.யை 12வது நிதிக்குழு அமுல்படுத்த பரிந்துரை செய்தது.

*இந்திய அரசமைப்பின் 101ஆவது திருத்தம் மூலமாக சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (GST) 01-07-2017 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த வரிக்கு ஐந்து அடுக்குகள் 0%, 5%,12%,18%, 28%. மதுபானங்கள், மின்சாரம் மற்றும் பெட்ரோலியப் பொருட்களுக்கு மாநில அரசுகள் பழைய முறையில் வரி விதித்துக்கொள்ளலாம். பத்திரங்கள் பரிவர்த்தனைக்கு ஜி.எஸ்.டி. கிடையாது. ஆனால் பத்திர பரிவர்த்தனை வரி (STT) எப்போதும் போல் உண்டு. வரி விகிதங்கள் மற்றும் ஒழுங்கு முறை விதிகள் ஜி.எஸ்.டி கவுன்சிலால்
நிர்வகிக்கப்படுகிறது. மத்திய நிதி அமைச்சரும் மாநில நிதி அமைச்சர்களும் இதன் உறுப்பினர்களாவர்.

*எட்டாவது ஐந்தாண்டு திட்டம் நடைபெற்ற காலம்
1992 - 1997

*சுதந்திர இந்தியாவின் முதல் தொழிற் கொள்கை வெளியிடப்பட்ட வருடம்
1948

*1970 ஆம் வருடம் வெளியிடப்பட்ட தொழிற்கொள்கையை பரிந்துரை செய்தது
தத் குழு

*ரெங்கராஜன் கமிட்டியின் பரிந்துரை
பொதுத்துறை பங்குகளைப்பற்றியது.

*உண்ணும் உணவைப் பொறுத்து கருதப்படும் கிராமப்புற/நகர்ப்புற வறுமைக்கோடுஅளவீடு - 2400/2100 கலோரிக்கு கீழ்

*வறுமை ஒழிப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டமான 20 அம்ச திட்டம் அமுல்படுத்தப்பட்ட வருடம்
1975
(அப்போதைய பிரதமர் - இந்திரா காந்தி )

*ஒரு கிராமத்தில் வருடத்திற்கு 100 நாள் வேலை கொடுக்கும் வேலைவாய்ப்பு உறுதி திட்டம் (EAS) நடைமுறைக்கு வந்த ஆண்டு
1993 ( பிரதமர் - நரசிம்மராவ், நிதி அமைச்சர் - மன்மோகன் சிங் )

*ஜவஹர் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட வருடம்
1999

*அத்யோதயா அன்னயோஜனா' என்ற திட்டத்தை அறிமுகம் செய்த பிரதமர்
அடல் பிஹாரி வாஜ்பாய்

*திட்டமிடுதல்(Planning) என்ற கருத்தை உலகிற்கு வழங்கிய நாடு - சோவியத் ரஷ்யா

*சரவதேச அளவில் மிகப்பெரிய காற்று மின்சக்தி நிலையம் உள்ள தமிழக மாவட்டம்
கன்னியாகுமரி

*பல முன்னோடி திட்டங்கள் மூலம் இந்திய பொருளாதாரத்தை கட்டமைத்ததால் நவீன இந்தியாவின் சிற்பி என்று அழைக்கப்படும் பிரதமர் - பண்டித ஜவாஹர்லால் நேரு

* இந்தியாவில் பொதுமக்கள் பணத்தின் பாதுகாவலர் என அழைக்கப்படுபவர்
தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி

*ஏ.டி.எம். பரிமாற்றக் கட்டண முறையை மறு ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு
வி.ஜி. கண்ணன் குழு.

*இந்திய வரிகளை எளிதாக்குவதில் பெரும் பங்கு வகித்ததால் இந்திய நேரடி வரி சீர்திருத்தங்களின் தந்தை என அழைக்கப்படுபவர்
ராஜா செல்லையா

*இந்தியாவில் புதிய தொழிற்கொள்கைகளை வகுப்பதில் பெரும் பங்கு வகித்தவர், பிராட்பேண்ட் லைசென்ஸ் முறையை அறிமுகப்படுத்தியவர் -
மாண்டேக் சிங் அலுவாலியா (உலக வங்கியில் பணியாற்றியவர்)

*நவீன இந்தியாவின் சாணக்கியர் எனப் போற்றப்படும் இந்தியப் பிரதமர்
நரசிம்ம ராவ்

*அந்நிய செலவாணி மாற்று வீதத்தில் முக்கிய சீர்திருத்தங்கள் செய்தவர், நவீன வங்கி முறைகளையும் உருவாக்கியவர்
சி. ரங்கராஜன் (1992-97 ரிசர்வ் வங்கி ஆளுநராக செயல்பட்டவர்)

*இந்தியாவில் வறுமை மற்றும் பிரிட்டிஷ் ஆட்சி என்ற புத்தகத்தை எழுதியவர்
இந்தியாவின் முதுபெரும் மனிதர் என அழைக்கப்படும் தாதாபாய் நௌரோஜி.

தொகுப்பு - ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்

முந்தைய பகுதி - https://www.hindutamil.in/news/supplements/thisai-katti/878752-tnpsc-group-1-simple-notes-for-preparation-part-7-5.html

அடுத்த பகுதி அக்டோபர் 10 திங்கள் அன்று வெளியாகும்


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x