

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் ஜூலை 24 அன்று நடத்தப்படவுள்ளது. இந்தத் தேர்வுகளில் கொள்குறி வினாக்கள்தான் கேட்கப்படும். எனவே, போட்டித் தேர்வுப் பயிற்சியாளராக நீண்ட அனுபவம் பெற்றவரும் குளோபல் விக்கிமாஸ்டருமான ஜி.கோபாலகிருஷ்ணன் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு, பிற போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்துவரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா - விடைகளை உருவாக்கிக் கொடுத்தார். இந்தியா, தமிழ்நாடு, வரலாறு, கணிதம், நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் கொள்குறி வினா-விடை பாணியில் 700 வினாக்களையும் அவற்றுக்கான விடைகளையும் அவர் தொகுத்து அளித்தார். அவை ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் வாரம் மூன்று பகுதிகளாக இந்து தமிழ் இணையதளத்தின் திசைகாட்டி இணையப் பக்கத்தில் பகுதிவாரியாக வெளியிடப்பட்டன. கடந்த புதன்கிழமை (ஜூலை 19) அன்று 35ஆம் பகுதியில் ‘இந்திய பொருளாதாரம்’ என்னும் தலைப்பின் கீழ் 20 கொள்குறி வினாக்கள் இடம்பெற்றன. அவற்றுக்கான விடைகள் இன்று அளிக்கப்படுகின்றன.
‘டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பயிற்சி வினா விடை தொகுப்பு’ இன்றுடன் நிறைவடைகிறது. இந்தத் தொடரில் இடம்பெற்ற 35 பகுதிகளும் இந்து தமிழ் இணையதளத்தின் திசைகாட்டி இணைப்பிதழுக்கான பகுதியில் உள்ளன. குரூப் 4 தேர்வை எழுதவிருக்கும் மாணவர்கள் அனைவரும் இதுவரை இந்தத் தொடரை பின்பற்றிவந்திருந்தால்கூட மீண்டும் ஒரு முறை அனைத்துப் பகுதிகளையும் முழுமையாகப் படித்துத் தேர்வுக்குச் சிறப்பாகத் தயார்படுத்திக்கொள்ளலாம்.
இந்தத் தொடரை அளித்த ஜி.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். குரூப் 4 தேர்வு எழுதவிருக்கும் மாணவர்கள் அனைவருக்கும் தேர்வில் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
பகுதி 35இல் இடம்பெற்ற வினாக்களுக்கான விடைகள்
1. ஆ) 1969
2. ஈ) மனித வளத்தைக் குறைவாகப் பயன்படுத்துதல் (முழுமையாகப் பயன்படுத்துதல்)
3. இ) கிரௌத்தர்
4. அ) கடன் கொடுத்தவர்
5. ஈ) வரி விதிப்பைக் குறைக்கலாம்
(அதிகப்படுத்தலாம்)
6. ஆ) 01-01-2015
7. இ) பிரதமர்
8. ஆ) N. K. சிங் (2020-2025)
9. இ) திண்டுக்கல்
10. ஆ) கரூர்
11. ஈ) நான்காமிடம்
12. ஆ) உத்தரப் பிரதேசம்
13. அ) பஞ்சாப்
14. இ) மைசூரு
15. ஆ) 1993
16. ஈ) பிரதம மந்திரி அவாஸ் கிராம யோஜனா - 2018 (2016)
17. இ) நான்கு (5%, 12%, 18%, 28%)
18. இ) வளர்விகித மற்றும் தேய்விகித வரிகள்
19. இ) டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன்
20. அ) 2016
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளைத் தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription